ஆர்.கே.நகரில் தினகரன் 'தொப்பியையும்' அபேஸ் பண்ணிருவாங்க போலயே!
சென்னை ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன் தொப்பி, கிரிக்கெட் மட்டை, விசில் உள்ளிட்ட 3 சின்னங்களை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
சென்னை : ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் தனக்கு தொப்பி, கிரிக்கெட் மட்டை, விசில் சின்னத்தில் ஏதாவது ஒன்றை ஒதுக்குமாறு தனது விண்ணப்பத்தில் கோரியுள்ளார்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார். இதற்காக நேற்று அவர் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட தொப்பி சின்னத்தையே தினகரன் இந்த முறையும் கோரியுள்ளார். ஆனால் தொப்பி சின்னம் கேட்டு பலரும் விண்ணப்பித்துள்ளனர். ஒரே சின்னத்திற்கும் பலரும் போட்டியிட்டால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த சின்னத்தை ஒதுக்குவதையே தேர்தல் ஆணையம் நடைமுறையாக வைத்துள்ளது.
இதனால் ஒருவேளை தொப்பி சின்னம் கிடைக்காமல் போனால் அடுத்ததாக கிரிக்கெட் மட்டை, விசில் சின்னம் ஒதுக்குமாறு தினகரன் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் ஏதாவது ஒரு சின்னத்தை வேட்பு மனுக்கள் பரிசீலனையின் பின்னர் தேர்தல் ஆணையம் அதிகாரிகள் வழங்குவார்கள்.
தொப்பி சின்னத்தை ஒதுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு கோரியதை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ள போதிலும் தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்குமாறு கோர்ட் உத்தரவிடாது என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications