பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது... மிரட்டி அணி மாற்றுகிறார்கள்- டிடிவி தினகரன்
பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது என்றும் குதிரை பேரம் நடப்பதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: ஆளுநர் காலம் தாழ்த்துவது குதிரை பேரம் நடக்க வழிவகுக்கும் என்றும், இன்று குதிரை பேரம் நடந்துள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆளுநரை சந்தித்த பின்பு டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். இது உட்கட்சி பிரச்சினையில்லை என்று ஆளுநருக்கு தற்போது தெரிந்துள்ளது. எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இது தெளிவாக தெரியவந்துள்ளது.

எடப்பாடி அரசிற்கு பெரும்பான்மை இல்லை என்பதை ஆளுநருக்கு கூறியுள்ளோம். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார்.
ஆளுநர் இனியும் காலம் தாழ்த்துவது குதிரை பேரம் நடக்க வழிவகுக்கும். இன்று குதிரை பேரம் நடந்துள்ளது. பணம் பாதாளம் வரை பாயும் என்று ஏற்கனவே கூறியுள்ளனர். மிரட்டியும் அணி மாற்றுகிறார்கள்.
எம்எம்ஏ ஜக்கையன் அணி மாறியதற்கான காரணம் தெரியவில்லை. எடப்பாடி அணியினர் மிரட்டுவதாக ஜக்கையன் தன்னிடம் கூறினார். உங்கள் விருப்பம் போல் செயல்படுங்கள் என கூறினேன்.
அவர்கள் அணியில் உள்ள எங்களின் ஸ்லீப்பர் செல்கள் விரைவில் எங்கள் பக்கம் வருவார்கள். அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எத்தனை பேர் ஆதரவாக இருப்பார்கள் என்பது தெரியவரும். ஆட்சியில் அமரவைத்தவர்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வத்தையும் பதவியில் இருந்து இறக்கும் வரை ஓயப்போவதில்லை என்று தினகரன் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications