ஆர்.கே.நகரில் தினகரனுக்கு படுகேவலமான தோல்வியே- உளவுத்துறை சர்வேயால் தினகரன் "ஷாக்"

ஆர்கே நகர் தொகுதியில் படுகேவலமான தோல்வியே கிடைக்கும் என்கிற உளவுத்துறை சர்வேயால் நொறுங்கிப் போயுள்ளாராம் டிடிவி தினகரன்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் படுகேவலமான தோல்விதான் கிடைக்கும்; முதல்வர் பதவி கனவில் மண்தான் விழும் என உளவுத்துறை கொடுத்த சர்வேயால் அதிர்ச்சியில் நொறுங்கிப் போயுள்ளாராம் டிடிவி தினகரன்.

ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் பணத்தையும் தங்கத்தையும் வாரி இறைத்து எப்படியும் வெல்லலாம் என்பது டிடிவி தினகரனின் கணக்கு. இதனால் பல வழிகளிலும் பணத்தை தண்ணீராக செலவழித்து வருகிறார் தினகரன்.

ஆர்கே நகர் தொகுதியின் எல்லைப் பகுதிகளான ராயபுரம் மற்றும் துறைமுகம் தொகுதிகளில் வைத்து இந்த பணப்பட்டுவாடா கனஜோராக நடைபெற்று வருகிறது. இதனிடையே தமது வெற்றி வாய்ப்பு நிலவரம் ஒரு சர்வே எடுக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டாராம் தினகரன்.

கேவலமான தோல்வி...

கேவலமான தோல்வி...

ஆர்கே நகரில் 10% வாக்காளர்களிடம் மட்டும் இந்த சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சர்வேயில் முதலிடத்தில் திமுக, 2-வது இடத்தில் ஓபிஎஸ் அணி; 3-வது இடத்தில் படுகேவலமான தோல்விதான் தினகரனுக்கு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளதாம்.

12% வாக்கு வித்தியாசமாம்

12% வாக்கு வித்தியாசமாம்

அதுவும் திமுக, ஓபிஎஸ் அணிக்கு இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் என்பது வெறும் 3% எனவும் ஓபிஎஸ் அணிக்கும் தினகரனுக்குமான வாக்கு சதவீத வித்தியாசம் என்பது 12% ஆகவும் இருக்கும் என்கிறதாம் இந்த சர்வே. உளவுத்துறையின் இந்த ரிசல்ட்டால் வெலவெலத்துப் போனாராம் தினகரன்.

அதிர்ச்சியில் மீளாத தினகரன்

அதிர்ச்சியில் மீளாத தினகரன்

அதே நேரத்தில் சில மூத்த அமைச்சர்களோ, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் உங்களுக்கு எதிராக உளவுத்துறையை வைத்து ரிப்போர்ட்டை ரெடி செய்திருக்கிறார் என சமயம் பார்த்து போட்டும் கொடுத்திருக்கின்றனர். ஆனாலும் தினகரனால் அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லையாம்.

தலைகாட்ட முடியாதே...

தலைகாட்ட முடியாதே...

உளவுத்துறையின் சர்வே சரியாக இருந்தால் வெளியே தலையே காட்ட முடியாதே என வெளிறிப் போன முகத்துடன் ஆர்கே நகரில் வலம் வருகிறார் தினகரன். கைக்கு எட்டும் தொலைவில் முதல்வர் நாற்காலி இருக்கிறது... ஆனால் தகுதிக்கேற்ப ஆசைப்பட்டால்தானே எல்லாமும் கிடைக்கும் என்பது இவர்களுக்கு எப்போதும் புரிவது இல்லை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+