வருமானவரித் துறை.. மத்திய பாதுகாப்புப் படையை காட்டி மிரட்டுகிறது பாஜக… தினகரன் ஆவேசம்
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் தான் வெற்றி பெற்றுவிடுவேன் என்ற அச்சத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு வருமானவரித் துறை ரெய்டு நடத்தி மிரட்டி வருகிறது என்று தினகரன் ஆவேசமாக கூறியுள்ளார்.
சென்னை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட சுமார் 35 இடங்களில் வருமானவரித் துறையினர் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா பெரிய அளவில் நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, அதிகாலையில் இருந்து விஜயபாஸ்கர், அவரது உறவினர்கள், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வருமானவரித் துறையினர் திடீரென சோதனை செய்தனர்.

சரத்குமார் வீடு ரெய்டு
குறிப்பாக, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் டிடிவி தினகரனை நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இன்று முதல் ஆர். கே. நகர் தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொள்வதாக சரத்குமார் தெரிவித்திருந்தார். தினகரனை சந்தித்த சில மணி நேரங்களிலேயே சரத்குமார் வீடு ரெய்டு செய்யப்படுவதற்கு அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்று சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக மிரட்டல்
இந்நிலையில், ஆர்.கே. நகரில் "நான் வெற்றி பெற்றுவிடுவேன் என்ற அச்சத்தால்தான் மத்தியில் ஆளும் பாஜக என்னை மிரட்டுகிறது" என்று அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அதிமுகவை வருமான வரித்துறை, மத்திய பாதுகாப்புப்படை மூலம் பாஜக தொடர்ந்து மிரட்டி வருகிறது என்றும் இதற்கெல்லாம் தான் அஞ்சப் போவதில்லை என்றும் தினகரன் கூறினார்.

ஜி.கே. வாசன்
நடிகர் சரத்குமார் வீடு ரெய்டு செய்யப்படுவதற்கு காரணமே அவர் நேற்று தன்னை சந்தித்து ஆதரவு தெரிவித்ததான் காரணம் என்று கூறியுள்ள தினகரன், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் வீட்டில் ஏன் ரெய்டு நடைபெறவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக முயற்சி
மேலும், தனக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் பணம் வாங்குவதாக கொச்சைபடுத்தப்படுகின்றனர் என்றும் தினகரன் குற்றம்சாட்டினார். ஜெயலலிதா மரணம் அடைந்ததில் இருந்து பாஜக அதிமுகவில் பிளவை ஏற்படுத்தி தனக்கான இடத்தை தமிழகத்தில் எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று கணக்கு போட்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications