டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்களும் அவர்களின் கேள்விகளும்!!
எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருக்கிறார்கள் என்று தினகரன் சொன்னது உண்மையாகி வருகிறது.
சென்னை: தினகரனின் ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக தற்போது வெளிப்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் எழுப்பும் ஒரே கேள்வி சின்னத்தை முடக்க காரணமான ஓபிஎஸ்ஐ துணை முதல்வராக்கியது ஏன்? என்பதுதான்.
டிடிவி தினகரனுக்கு வெளிப்படையாக 19 பேர் எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து விட்டு புதுச்சேரியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். அவர்களின் கேள்வி எல்லாம், ஓ.பன்னீர் செல்வத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன் என்பதுதான்.
சசிகலா, தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியை நடத்த முடியாது என்று சவாலாகவே கூறி வருகின்றனர் எம்எல்ஏக்கள். எங்களுக்கு ஆதரவாக 60 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர் என்று திவாகரன் வெளிப்படையாக கூறியுள்ளார்.

21 எம்எல்ஏக்கள்
விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன் தினகரன் வீட்டில் அவரைச் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. ஸ்லீப்பர் செல்கள் இப்போது ஒவ்வொருவராக வெளிப்பட்டு வருகின்றனர்.

கட்சியே எங்கள் இலக்கு
புரட்சித் தலைவர் உருவாக்கி, ஜெயலலிதாவால் காப்பாற்றப்பட்ட கட்சியை கைப்பற்றுவதே எங்கள் இலக்கு என்று கூறியுள்ளார் செந்தில் பாலாஜி. ஒரு முடிவு தெரியாமல் இங்கிருந்து நகரப்போவதில்லை என்று கூறியுள்ளனர்.

80 பேர் இருக்காங்க
எங்கள் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 80ஐ தாண்டும். பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் எங்களிடம் உள்ளனர் என்பதை விரைவில் நிரூபிப்போம். பலர் மனதளவில் எங்களோடு உள்ளனர். அது விரைவில் வெளிப்படும் என்று கூறியுள்ளார் தங்க தமிழ் செல்வன்.

எங்களுக்கு முக்கியத்துவம்
9 எம்எல்ஏக்களை வைத்திருந்த ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து பேசி வம்படியாக இழுத்து சேர்த்தனர். துணை முதல்வர் பதவி கொடுத்தனர். இப்போது இத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ள தினகரனிடம் பேச தயங்குவது ஏன் என்பது அவர்களின் கேள்வியாக உள்ளது.

கலைச்செல்வன் கேள்வி
122 எம்எல்ஏக்களில் ஒருவரை துணை முதல்வராக்காமல், சின்னத்தை முடக்க காரணமான பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக்கியது ஏன்? கலைச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். என்னை போன்று மனக்குமுறலுடன் பல எம்எல்ஏக்கள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே கேள்விதான்
கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் இழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை ஏற்க முடியாது என்றும் கலைச்செல்வன் கூறியுள்ளார். கலைச்செல்வன் மட்டுமல்ல தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரின் கேள்வியும் இதுவாகத்தான் உள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications