மதுசூதனனை வேட்பாளராக நிறுத்தியதே ஸ்டாலின்தான்... டிடிவி தினகரன் 'பொளேர்'
மதுசூதனனை வேட்பாளராக நிறுத்தியதே ஓ.பன்னீர் செல்வமும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும்தான் என்று ஆர்.கே. நகர் தொகுதியின் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.
சென்னை: எதிர்க்கட்சிகளின் சதியை முறியடித்து ஆர்.கே.நகர் இடைதேர்தலில் அபார வெற்றி பெறுவேன் என்று அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.
ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டிகள் கடுமையாக உள்ளதால் அதிமுகவின் இரண்டு அணிகளும், திமுகவும் கடுமையான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.கே.நகரில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் இன்று பிரசாரம் செய்தார். அப்போது மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், ஓ.பன்னீர் செல்வம் அணி திமுகவின் பி அணியாகும்.
ஓ.பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து மதுசூதனனை வேட்பாளராக நிறுத்தியதே மு.க.ஸ்டாலின்தான். இவர்கள் என்னை தோற்கடிக்க சதி திட்டம் தீட்டி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் சதிகளை முறியடித்து இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார்.
அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக எம்எல்ஏக்களின் நண்பர்கள் மூலம் மு.க.ஸ்டாலின் பேரம் பேசி வருவதாக தினகரன் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசியபோது குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications