உடல் நலம் தேறி வருகிறார் கார் விபத்தில் சிக்கிய பெங்களூரு புகழேந்தி
பெங்களூரு புகழேந்தி தற்போது கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
கோவை : சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த டி.டி.வி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தற்போது கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு முன் கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளராக இருந்தவர் பெங்களூரு புகழேந்தி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டி.டி.வி தினகரனின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்டார். தற்போது தினகரன் அணியின் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.

இவர் கடந்த 7-ஆம் தேதி தனது நண்பரின் இல்லத் திருமணத்திற்காக பெங்களூரில் இருந்து திண்டுக்கல்லிற்கு காரில் சென்றார். அப்போது திண்டுக்கல் அருகே ஏற்பட்ட விபத்தில் அவரது கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்ததில் அவர் படுகாயமடைந்தார்.
இரண்டு கைகளிலும் பலத்த காயமடைந்த நிலையில் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி தற்போது மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த மருத்துவமனை நரம்பு மற்றும் எலும்பியல் துறைகளுக்கு மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது புகழேந்தி உடல் நலம் தேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை நாஞ்சில் சம்பத் இன்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்து உள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications