தினகரனுக்கு எதிராக கூலிக்கு ஆள்பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்த வைக்கிறார்கள்! - ஆதரவு எம்எல்ஏக்கள்
சென்னை: டிடிவி தினகரனுக்கு எதிராக கூலிக்கு ஆள்பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்த வைக்கிறார்கள் இபிஎஸ், ஓபிஎஸ் குழுவினர். இந்த முறை அது எடுபடாது என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி - ஓ பன்னீர்செல்வம் குழுக்கள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்வர் எடப்பாடியை மாற்றக் கோரியும் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நேரடியாக 21 எம்எல்ஏக்களும், மறைமுகமாக மேலும் 20 எம்எல்ஏக்களும் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் இணைப்புக்குப் பின்னும் எடப்பாடி பழனிச்சாமி அரசு நிம்மதியின்றி தவித்து வருகிறது.

மறுபக்கம் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் 19 பேர் புதுவை சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஓய்வெடுக்க இங்கு வந்துள்ளதாக அவர்களுக்கு தலைமை தாங்கும் தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
விடுதிகளில் தங்கியுள்ளவர்கள் தவிர, எஞ்சியோர் அவரவர் வீடுகளில் இருந்தபடியே தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று இரண்டு எம்எல்ஏக்கள் வெளிப்படையாக தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். சூலூர் எம்எல்ஏ கனகராஜ் உள்ளிட்டோர் தினகரனை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்றாலும், எடப்பாடி அரசுக்கு ஆதரவு இல்லை என்று கூறியுள்ளனர்.
எடப்பாடி அரசுக்கு ஆதரவு இல்லை என்று கூறும் எம்எல்ஏக்கள் வீடுகளை பொதுமக்கள் என்ற பெயரில் கூலிக்கு ஆள் பிடித்து முற்றுகையிடுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தினகரன் ஆதரவாளராக மாறிய பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலை வீட்டை நேற்று சில பெண்கள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து ஏழுமலை கூறுகையில், "இந்த பெண்கள் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. தொடர்ந்து இதே மாதிரி வேலைகளை இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செய்துவருகின்றனர். இந்த ஆட்சி நிலைக்காது. டிடிவி தினகரனால்தான் அதிமுகவை சரியாக வழிநடத்த முடியும். விரைவில் காட்சிகள் மாறும்," என்றார்.
தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ கூறுகையில், "இன்று பதவியில் உள்ள ஓபிஎஸ், இபிஎஸ் அத்தனைப் பேரும் யாரால் இந்த நிலைக்கு வந்தனர் என்பதை மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது. டிடிவி தினகரன் வழிகாட்டுதலில் இந்த அரசு நடக்க வேண்டும். இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இல்லாத அதிமுக அரசுதான் எங்கள் லட்சியம்," என்றார்.
-
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள் -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications