பணப்பட்டுவாடா செய்த தினகரன் கோஷ்டி… செல்போனில் படம் பிடித்து வெளியிட்ட பலே ஓபிஎஸ் அணி
ஆர்.கே. நகர் தொகுதியில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியல் வைத்துக் கொண்டு பணப்பட்டுவாடா செய்த போது எடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஆர். கே. நகரில் தொப்பிச் சின்னத்தில் போட்டியிடுகிறார் டிடிவி தினகரன். அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரி அவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் காட்சிகளை ஓபிஎஸ் அணியினர் செல்போனில் படம் பிடித்தனர். அதிர்ச்சி அளிக்கும் அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வீடியோவில் ஒரு குடும்பத்தில் உள்ள ஆண்கள் பெண்கள் என அனைவரும் ஒரு வீட்டில் ஒன்று கூடி நிற்கின்றனர். வெள்ளை சட்டையுடன், லுங்கி கட்டிக் கொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு சாதாரண நபர் போன்று வீட்டிற்குள் ஒருவர் நுழைகிறார். அவரைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலை எடுத்துக் கொண்டு மற்றொருவர் உள்ளே நுழைகிறார்.

பின்னர், நிதானமாக வாக்காளர் பட்டியலை பிரிக்கும் ஒருவர் பட்டியலில் உள்ள குறிப்பிட்ட முகவரியில் உள்ள பெயர்களை சரிபார்க்கிறார். அந்த பெயர்களை அவர் உறுதி செய்த பின்னர், கட்டுக்கட்டாய் புத்தம் புதிதாய் கையில் மின்னும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை இரண்டு எடுத்து ஒருவர் வாக்காளர் கையில் நீட்டுகிறார்.
அப்போது தொப்பி சின்னத்துக்கு ஓட்டு போடுங்க என்று பணம் கொடுத்த அதிகாரத்தோடு சொல்கிறார். பின்னர், அடுத்தது யாரு என்று கேட்கிறார். அவருக்கும் இரண்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை எண்ணி கொடுக்கிறார். பின்னர் சகுந்தலா மற்றும் சில பெயர்களை சொல்லி ஏதோ கேட்கிறார்.
இவர் பணத்தை கொடுத்து முடிந்த உடன் வாக்காளர் பட்டியலோடு உள்ளே நுழைந்தவர் பணம் பெற்ற வாக்காளர் பெயரை சரியாக டிக் செய்து கொள்கிறார். டிடிவி தினகரன் கோஷ்டியினர் செய்யும் இந்த அட்டூழியங்களை ஓபிஎஸ் அணியினர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications