எங்க கிட்ட ஆடியோ இருக்கு.. போட்டுக் காட்டட்டா.. வெற்றிவேல் அதிரடி!
நீட் வேண்டாம் என்று ஜெயலலிதா கூறிய ஆடியோ உள்ளது. போட்டுக் காட்டவா என்று டிடிவி. தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கேட்டுள்ளார்.
Recommended Video

புதுச்சேரி : தமிழக மக்களும் எங்களைப் போலவே ஜெயலலிதா இல்லாத வெறுமையை உணர்கின்றனர். ஜெயலலிதா இருந்திருந்தால் நீட் தேர்வு அனுமதிக்கப்பட்டிருக்காது, அனிதா உயிரிழந்திருக்க மாட்டார். நீட் வேண்டாம் என்று ஜெயலலிதா சொன்ன ஆடியோ எங்களிடம் இருக்கிறது, அதை போட்டுக் காட்டட்டுமா? என்று வெற்றிவேல் கூறியுள்ளார்.
புதுச்சேரி தி விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டில் தங்கியுள்ள டிடிவி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை வெற்றிவேல் எம்எல்ஏ இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : டிடிவி அணியில் இருந்து எந்த எம்எல்ஏக்களும் ஓடவில்லை. 10 எம்எல்ஏக்கள் தங்களின் தொகுதிப் பணிக்காக சென்றுவிட்டு திரும்பியுள்ளனர்.
20 எம்எல்ஏக்களும் ஒற்றுமையாகத் தான் இருக்கிறோம், இதைச் சொல்லவே அனைவரையும் இங்கு அழைத்து வந்து காட்டுகிறோம். அதர்மத்தை ஒழிக்கவே நாங்கள் ஓரணியாக இருக்கிறோம். சபாநாயகரை சந்திக்க 5 எம்எல்ஏக்கள் செல்கிறோம், நான், தங்கதமிழ்ச்செல்வன், பழனியப்பன் இன்னும் 2 எம்எல்ஏக்கள் செல்ல உள்ளோம்.

முதல்வர் ஏன் போகவில்லை?
கட்சி யாரிடம் இருக்கிறது என்பது பொறுத்திருந்து பாருங்கள் தெரியும், கட்சி விதிப்படி நாங்கள் தான் கட்சி அதை யாராலும் மாற்ற முடியாது.
ஏழை மாணவி அனிதா மரணத்திற்கு Z ப்ளஸ் பாதுகாப்பில் இருக்கும் முதல்வர் பழனிசாமி ஏன் செல்லவில்லை.

வெறுமை
தமிழக மக்களும் எங்களைப் போலவே ஜெயலலிதா இல்லாத வெறுமையை உணர்கின்றனர். ஜெயலலிதா இருந்திருந்தால் நீட் தேர்வு அனுமதிக்கப்பட்டிருக்காது, அனிதா உயிரிழந்திருக்க மாட்டார். நீட் வேண்டாம் என்று ஜெயலலிதா சொன்ன ஆடியோ எங்களிடம் இருக்கிறது, அதை போட்டுக் காட்டட்டுமா?

அழைப்பு இல்லை
எடப்பாடி பழனிசாமி கூட நாங்கள் ஏன் இணைய வேண்டும், பெரும்பான்மையை அவர்கள் நிரூபிக்கும் போது தெரியும் யாரிடம் அதிக ஆதரவு இருக்கிறது என்று. முதல்வர் பழனிசாமி நடத்தும் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு முறையான அழைப்பு இல்லை தொலைபேசியில் எங்களை கூப்பிட்டனர். இதுவரை எப்படி மறையான அழைப்பு கொடுத்தார்களோ அப்படி அழைக்க வேண்டும்.

சமரசம் கிடையாது
சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, முதல்வர் வேண்டாம் என்று தானே நாங்கள் மனு கொடுத்திருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் உறுதியாக இருக்கிறோம் தினகரன் தான் கட்சி அவர் சொல்வதை கேட்டுத் தான் நடக்க வேண்டும், என்று வெற்றிவேல் கூறினார்.












Click it and Unblock the Notifications