தினகரனுக்கு முக்கியத்துவம் தராவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு இல்லை.. எம்எல்ஏக்கள் போர்க்கொடி!
டிடிவி தினகரனை முன்னிலைப்படுத்தாவிட்டால் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு தரமாட்டோம் என தினகரன் ஆதரவு எம்எல்ஏல்கள் கூறியுள்ளனர்.
சென்னை: டிடிவி தினகரனை முன்னிலைப்படுத்தினால் மட்டுமே குடியரசுத்தலைவர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சொல்லும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூறியுள்ளனர்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏல்கள் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று மாலை தலைமை செயலகத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, டிடிவி தினகரனின் கட்சி பணிக்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது. ஆட்சியை மட்டும் அமைச்சர்கள் கவனிக்க வேண்டும். கட்சியை தினகரன் பார்த்துக் கொள்வார் என்றும் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், டிடிவி தினகரனை முன்னிலைப்படுத்த வேண்டும், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற வேண்டும், இப்தார் விருந்து டிடிவி தினகரன் தலைமையில் நடத்த வேண்டும். இதற்கெல்லாம் சம்மதம் தெரிவித்தால் குடியரசுத்தலைவர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சொல்லும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கூறினார்களாம். தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தினகரனை ஆதரிக்கும் 34 எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications