மேலூர் கூட்டத்தில் என்னை தவறாக பேசிவிட்டார் தினகரன்... எம்எல்ஏ ராமச்சந்திரன் கொதிப்பு
நேற்று நடந்த மதுரை மேலூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில், தினகரன் என்னைப் பற்றி தவறான கருத்தைத் தெரிவித்துள்ளார் என்று குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: மேலூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் டிடிவி தினகரன் என்னைப் பற்றி தவறான கருத்தைத் தெரிவித்துள்ளார் என்று குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கூறியிருக்கிறார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், " அ.தி.மு.க அரசை மிரட்டும் வகையில் டிடிவி தினகரன் செயல்படுகிறார். ஆட்சியைக் கலைக்கும் நோக்கத்தில் தினகரன் செயல்படுகிறார்.

மேலூர் பொதுக்கூட்டத்தில், என்னைப் பற்றி தினகரன் தவறான கருத்தைத் தெரிவித்து உள்ளார். கட்சியைக் கைப்பற்ற நினைத்ததால் கட்சியில் இருந்து டிடிவி தினகரனை நீக்கினார் ஜெயலலிதா.
அ.தி.மு.க.வில் தொண்டனாக கூட டிடிவி தினகரன் இருந்தது இல்லை. அதிமுகவிற்காக எத்தனை முறை சிறை சென்றீர்கள் என்பதைத் தினகரன் அடுத்த கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். அந்நிய செலாவணி மோசடியில் சிங்கப்பூரில் கைது செய்து அழைத்து வரப்பட்டவர் டிடிவி தினகரன்.
சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினரால் தான் ஜெயலலிதா சிறைக்கு சென்றார். இமை போல் காக்காததால் தான் ஜெயலலிதா இவ்வளவு சீக்கிரம் மரணம் அடைந்தார். டிடிவி தினகரன் வாரிசு அரசியல் செய்து கொண்டு இருக்கிறார். டிடிவி தினகரனை சந்திக்கக் கூடாது எனக் கூறியவரே திவாகரன் தான்.
கமல்ஹாசன் ஒரு டுவிட்டர் அரசியல்வாதி. அவர் அரசியலுக்கு வந்து விளையாடட்டும் அப்போது பார்க்கலாம் " என்று தெரிவித்தார் ராமச்சந்திரன்.
மேலும் அவர், " திவாகரனின் மகன் ஜெயந்த் ஆனந்த், மேலூர் கூட்டத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டது ஏன்?" என்றும் கேள்வி எழுப்பினர். அதிமுகவில், " பதவிகளை தினகரன் மட்டும் அல்ல சசிகலா குடும்பமே விற்பனை செய்ததாகவும்" குன்னம் எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications