ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் ஈட்டியை பாய்ச்சியது போல் வலி: உருகும் டிடிவி.தினகரன்
டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டம் ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் ஈட்டியை பாய்ச்சியது போல் இருந்ததாக டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டம் ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் ஈட்டியை பாய்ச்சியது போன்ற வலியை ஏற்படுத்தியதாக டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 28 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லியில் ஜீவ போராட்டம் நடத்தியும் பிரதமர் அவர்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது வேதனையளிக்கிறது என்றுடம் தினகரன் கூறியுள்ளார்.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரம் தமிழக விவசாயிகள் இன்று நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

பிரதமரை சந்திக்க வைப்பதாக அழைத்துச்சென்ற டெல்லி போலீஸ் ஏமாற்றியதால் விரக்தியடைந்த விவசாயிகள் பிரதமர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் தங்களின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப் போராட்டம் நடத்தினர்.
நிர்வாணமாக நமது விவசாயிகள் டெல்லியில் இன்று போராடியது ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் ஈட்டியை பாய்ச்சியது போல் வலி ஏற்படுத்துகிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 10, 2017
இந்நிலையில் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி.தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் நிர்வாணமாக நமது விவசாயிகள் டெல்லியில் இன்று போராடியது ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் ஈட்டியை பாய்ச்சியது போல் வலி ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி உடனடியாக தமிழக விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளை களைய வேண்டும்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 10, 2017
பிரதமர் மோடி உடனடியாக தமிழக விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளை களைய வேண்டும் என்றும் டிடிவி.தினகரன் டிவிட்டர் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
28 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லியில் ஜீவ போராட்டம் நடத்தியும் பிரதமர் அவர்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது வேதனையளிக்கிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 10, 2017
28 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லியில் ஜீவ போராட்டம் நடத்தியும் பிரதமர் அவர்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது வேதனையளிக்கிறது என்றும் டிடிவி.தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications