கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்: டிடிவி தினகரன்
கருணாநிதி குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க டிடிவி தினகரன் காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் நேற்றிரவு முதல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் தமிழக மற்றும் இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் பலர் காலையிலிருந்தே மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து அறிந்து கேட்டு வருகின்றனர். அதேபோல, திமுக தொண்டர்களும் ஏராளமான பொதுமக்களும் கருணாநிதியின் உடல்நலத்தின் நிலைமையை அறிய மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர். அவரது உடல்நலனில் முன்னேற்றம் இருப்பதாகவும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க டிடிவி தினகரன் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications