For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலெக்டர்களை தூக்கி அடியுங்க... தினகரனின் தடலாடி உத்தரவு... கண்டுகொள்ளாத எடப்பாடி

கலெக்டர்களை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விவாதித்துள்ளார் தினகரன். இடைத்தேர்தல் முடிந்து இறுதி முடிவு எடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார் முதல்வர்.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: மாவட்ட கலெக்டர்களாக இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரையும் மாற்ற முடிவு செய்திருக்கிறார் டிடிவி தினகரன். அமைச்சர்கள் சிலரின் அபிலாசைகளை நிறைவேற்ற இந்த முடிவை சீரியசாக எடுத்துள்ளாராம்.

உள்ளூர் பிரமுகர்களுக்கு குடைச்சல் கொடுத்து வரும் கலெக்டர்களுக்கே இந்த 'தண்டனை' வழங்க டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளாராம். அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்களுக்கு வளைந்து கொடுக்காத அந்த அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்க இந்த திட்டமாம்.

TTV Dinakaran wants many district collectors have to be transferred

இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விவாதித்துள்ளார் தினகரன். இடைத்தேர்தல் முடிந்து இறுதி முடிவு எடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார் முதல்வர்.

எப்படியும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் வெற்றி பெறமாட்டார். வெற்றி பெறாவிட்டால் தினகரன் உத்தரவை உடனடி நிறைவேற்ற வேண்டியத்தேவையிருக்காது என நினைத்தே எடப்பாடியார் அப்படி சொல்லியிருக்கிறாராம்.

ஆனால், எடப்பாடியாரின் திட்டத்தை புரிந்து கொண்ட தினகரன், இந்த வாரத்திலேயெ மாற்றம் நடக்க வேண்டும் என்கிறாராம். என்ன முடிவெடுப்பது என யோசித்துக் கொண்டிருக்கிறாராம் எடப்பாடியார்.

English summary
TTV Dinakaran wants many district collectors have to be transferred says sources, he discussed with CM as well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X