ஆட்டம் களைகட்டுது.. ஆக. 5 முதல் தமிழகம் முழுவதும் டிடிவி தினகரன் சுற்றுப்பயணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அவரது ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தினகரன் விரைவில் சந்திப்பார் என்றும் அவர் கூறினார்.

எடப்பாடி தரப்புக்கும் தினகரன் தரப்புக்கும் இடையே மேதால் முற்றி வருகிறது. எடப்பாடி தரப்பைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் எம்பிக்களும் தினகரனுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

TTV Dinakaran will be touring Tamilnadu from August 5th : Pugazhendi

சசிகலாவின் வாரிசு அரசியலை ஏற்க முடியாது என கூறி தினகரல பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் பேசுவதையெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வெற்றிவேல் எம்எல்ஏ கூறியது போல் நரசிம்ம ராவ் போல் வேடிக்கை பார்த்து வருகிறார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கஸ்ட் 5ஆம் தேதிக்கு பின் நான் என்ன செய்யப்போகிறேன் என பாருங்கள் என குதர்க்கமாக கூறினார். இந்நிலையில் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரும் கர்நாடக மாநில அதிமுகவின் மாநில செயலாளருமான புகழேந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று தெரிவித்தார். எங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் விரைவில் தீர்ந்துவிடும் என்றும் புகழேந்தி கூறினார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை டிடிவி தினகரன் விரைவில் சந்திப்பார் என்றும் புகழேந்தி கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran will be touring Tamilnadu from August 5, his supporter Pugazhendi said. Dinakaran will meet Chief Minister Edappadi Palanisamy soon, he said.
Please Wait while comments are loading...