தமிழகத்தை டிடிவி தினகரன் விரைவில் ஆட்சி செய்வார்.. புகழேந்தி ஆரூடம்!
தமிழகத்தை டிடிவி தினகரன் விரைவில் ஆட்சி செய்வார் என அவரது ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

புகழேந்தி இப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறாரே..வீடியோ
கோவை: தமிழகத்தை டிடிவி தினகரன் விரைவில் ஆட்சி செய்வார் என அவரது தீவிர ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுகவில் பெரிய மாறுதல் ஏற்படும் என்று அவர் கூறினார்.

எந்த நேரத்திலும் அந்த பெரிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமியை நம்பி பயனில்லை என்று அதிமுகவினர் புரிந்து கொண்டுவிட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
சசிகலாவின் ஆசியுடன் விரைவில் தமிழகத்தில் தினகரன் ஆட்சி செய்வார் என்றும் புகழேந்தி தெரிவித்தார். அதிமுக தொண்டர்கள் முதல்வரை நம்பி போகவில்லை என்றும் புகழேந்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications