ஆர்.கே. நகரில் மகாபிரபு ஜெயிச்சிருவாரோ? கருத்துக்கணிப்பு கலந்து கட்டி அடிக்குதே
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் ஜெயிப்பார் என்று பேராசிரியர் ராஜநாயகம் கூறிய நிலையில் இப்போது குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பும் டிடிவி தினகரனுக்கு சாதகமாக கூறியுள்ளது.
Recommended Video

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு வாக்களிக்கப் போவதாக அதிக அளவில் வாக்காளர்கள் கூறியுள்ளதாக குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.
எந்த தேர்தலிலாவது சுயேட்சை ஜெயிச்சிருக்காங்களா? என்று செல்லூர் ராஜூ கேட்கிறார். 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மதுசூதனன் ஜெயிப்பார் என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர். முதல்வரும், துணை முதல்வரும் மதுசூதனனை ஜெயிக்க வைக்க போராடுகின்றனர்.
இது என் தத்துப்பிள்ளை என்று கூறி திமுக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு ஆதரவு திரட்டுகிறார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின்.

தினகரன் போட்டி
டிடிவி தினகரன் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். தனக்கென ஒரு பாணி வைத்துக்கொண்டு ஓட்டு சேகரிக்கும் தினகரன், குக்கர் வரைந்தால் அதற்கு தனி கவனிப்பு, பூரண கும்ப மரியாதைக்கு ஒரு கவனிப்பு என கலந்து கட்டி அடிக்கிறார். பூ தூவும் வாக்காளர்களும் தனியாக கவனிக்கப்படுகின்றனர்.

மகாபிரபு ஜெயிப்பார்
ஆர்.கே. நகரில் மகாபிரபு ஜெயிப்பார் என்று மதுரை கலெக்டர் அலுவலக வாசலில் வசிக்கும் ஜீன்ஸ் சித்தர் அருள் வாக்கு சொன்ன போதே டிடிவி தினகரன் புது தெம்பாக வலம் வந்தார். கூடவே பேராசிரியர் ராஜநாயகத்தின் இரண்டு கருத்துக்கணிப்புகளும் தினகரனுக்கு சாதகமாகவே உள்ளது.

பிரசரை ஏற்றும் குக்கர்
தொப்பிக்கு போராடி கடைசியில் குக்கர் கிடைக்கவே அதை வைத்து பிரசரை ஏற்றி வருகிறார் தினகரன். இரட்டை இலை, சூரியனை விட தினகரனின் குக்கர்தான் அதிகமாக விசிலடிக்கிறது என்கிறது ராஜநாயகத்தின் சர்வே.

குமுதம் ரிப்போர்ட்டர் சர்வே
ஆர்.கே. நகர் வாக்காளர்களிடம் குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் நடத்திய சர்வேயிலும் தினகரனுக்கு சாதகமாகவே வந்துள்ளது. ஆர்.கே.நகரில் யாருக்கு உங்கள் ஓட்டு என்று கேட்டதற்கு மக்கள் அளித்த பதில்கள்:
டிடிவி தினகரன் - 27.5%
அதிமுக - 26.9%
திமுக - 24.8%
மற்றவர்கள் - 15.2%
நாம் தமிழர் கட்சி - 5.1%
பாஜக - 0.5%
டிடிவி தினகரனுக்கே ஆர்.கே. நகர் வாக்காளர்கள் ஓட்டு போடுவோம் என்று கூறியதாக சர்வே முடிவு தெரிவிக்கிறது.

சுயேட்சை ஜெயிப்பாரா?
அதிமுக, திமுக என்ற கட்சி பலம், இரட்டை இலை, உதய சூரியன் என்ற சின்னத்தின் பலத்தை எதிர்த்து களமிறங்கியுள்ளார் தினகரன். இந்த இரண்டு பலத்தையும் மீறி தினகரன் ஜெயித்து விடுவாரா? ஜெயித்தால் கணிப்பு உண்மையாகிவிடும். தோற்றுப் போனால் எல்லா கணிப்பும் திணிப்பு என்பது உண்மையாகிவிடும். ஆர்.கே. நகரில் தெரிந்து விடும் டிடிவி தினகரனின் செல்வாக்கு.












Click it and Unblock the Notifications