லஞ்ச சம்பவத்தால் தமிழகத்துக்கு அவமானம் தேடித்தந்து விட்டார் தினகரன்: தமிழிசை காட்டம்
தேர்தல் ஆணையத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாலேயே தினகரன் கைது செய்யப்பட்டதாக தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
சென்னை : தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றது குறித்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே டிடி வதினகரன் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் கைது குறித்து கருத்து தெரிவித்த அவர், சட்டம் தன் கடமையை செய்தே ஆக வேண்டும் என்ற அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மக்களிடம் பணத்தைகொடுத்து வாக்குகளை பெற்று விடலாம் என்ற மாண்பை உருவாக்கிய தினகரன், தேர்தல் ஆணையத்திற்கு ஊழல் பணத்தை சன்மானமாக கொடுத்து தன்மானத்தை விற்றவர் என்றும் வசைபாடியுள்ளார் தமிழிசை. மேலும் தமிழகத்திற்கே மிகப்பெரிய அவமானத்தை தேடித் தந்த தினகரன் மீது நடவடிக்கை எடுத்ததை பாஜகவின் பின்னணி என்று கூறுவது ஏற்க முடியாதது என்றும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தினகரனை மனித புனிதரைப் போல பாவிப்பது நகைப்புக்குரியது என்றும, யார் குற்றம் செய்தாலும் தண்டனை கிடைத்தே தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனும், சுகேஷும் மாறி மாறி தங்களுக்கு ஒருவரையொருவர் தெரியாது என்று கூறினாலும் இருவரும் தொலைபேயில் உரையாடியது, பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கான சிசிடிவி காட்சிகள் என ஏராளமான ஆதாரங்களை திரட்டி பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் கடைசி கட்டமாகவே தினகரன் கைது நடைபெற்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications