நாளை காலை 10 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறோம்.. வெற்றிவேல் ஆவேசம்!
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நாளை காலை 10 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ளதாக வெற்றிவேல் கூறியுள்ளார்.
சென்னை : எங்கள் தரப்பு நியாயத்தை ஆளுநரை சந்தித்து நாளை முறையிடப் போகிறோம் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
அதிமுக அணிகள் இணைப்புத் தகவல் வெளியான போதும் தினகரன் தரப்பு அமைதியாகவே இருக்கிறது. இதனால் அடுத்தகட்டமாக இவர்கள் என்னசெய்யப்போகிறார்கள் என்ன எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்தது. இன்று காலை முதல் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைப்பு தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் தினகரன் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

மாலை 8 மணியளவில் ஜெயலலிதா சமாதிக்கு வந்த தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் சிறிது நேரம் சமாதி முன் அமர்ந்து தியானம் செய்தனர். சுமார் 20 நிமிடங்கள் தியானம் செய்துவிட்டு வந்த வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வெற்றிவேல், நாளை காலை ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், காலை 10 மணியளவில் அவரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
"தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க நேரம் கேட்டோம், அவர் நாளை காலை 10 மணிக்கு நேரம் கொடுத்திருக்கிறார். ஆளுநரை சந்தித்து என்ன விஷயங்களை சொல்லப் போகிறோம் என்பதை சந்தித்த பிறகு தான் சொல்ல முடியும். முன்கூட்டியே ஊடகங்களிடம் சொல்லிவிட்டால் அது மரபுபடி சரியானதல்ல" என்றும் வெற்றிவேல் கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications