"சீட்" பறிப்பால் சோகத்தில் கோவில்பட்டி அதிமுக வேட்பாளர்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அதிமுக வேட்பாளர் அதிரடியாக மாற்றப்பட்டதால் அவர் வாயிலும், வயிற்றிலும் அடித்து கொண்டு கதறி கொண்டிருக்கிறார். இதனால் மேலும் பல வேட்பாளர்கள் பயத்,தில் உளளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதி வேட்பாளராக மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ராமனூஜம் கணேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை அவர் வெகு சிறப்பாக கூட்டினார்.

இது மட்டுமல்லாமல் தேர்தல் பிரச்சார வாகனத்தில் பிரரச்சாரமும் செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அரும்புகோட்டையில் ஜெயலலிதா பிரச்சாரத்திற்காக இவரது ஏற்பாட்டில் தொண்டர்களை வாகனத்தில் ஏற்றி சென்றனர். இவர்களுக்கு உணவாக புளியோதரை, தயிர்சாதம், குஸ்கா, அவித்த முட்டை வழங்கப்பட்டது. இந்த ஏற்பாடுகளுக்காக அவர் ரூ.1 கோடி வரை செலவு செய்ததாக அவரது உறவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அவரை மாற்றி விட்டு திடீரென சிட்டிங் எம்எல்ஏவான கடம்பூர் ராஜூவை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதனால் ராமனுஜம் கணேஷ் கடும் அதிர்ச்சியில் உள்ளார். நம்பிக்கையுடன் கட்சிக்காக பெரும் செலவு செய்து விட்ட நிலையில் இப்படி நடந்து விட்டதோ என ஆற்றாமையுடன், வேதனையுடனும் வீட்டில் இருந்து வருகிறார். இதுகுறித்து தகவல் தெரிந்த தொண்டர்கள் அவரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே வேட்பாளர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு சாலை மறியல் நடக்க போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது போல் பாளை தொகுதி வேட்பாளர் தமிழ்மகன் உசேனும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளர் புவனேஸ்வரனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications