சசிகலா புஷ்பா, சின்னத்துரைக்கு சீட்டா?.. தூத்துக்குடி அதிமுகவில் புகைச்சல்
தூத்துக்குடி: ராஜ்யசபா தேர்தலில் தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா மற்றும் சின்னத்துரை ஆகியோருக்கு சீட் தரப்பட்டுள்ளதற்கு அங்குள்ள அதிமுகவினர் மத்தியில் அதிருப்தி கிளம்பியுள்ளதாம்.
ராஜ்யசபா தேர்தலில் நான்கு இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களை நேற்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த நான்கு வேட்பாளர்களுமே தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதனால் இந்த இரு மாவட்ட அதிமுகவினரும் குஷியடைந்துள்ளனர். அதேசமயம், தூத்துக்குடியில் அதிமுகவினர் மத்தியில் புகைச்சலும் கிளம்பியுள்ளது. அதாவது மேயர் சசிகலா புஷ்பா மற்றும் சின்னத்துரை ஆகியோருக்கு சீட் தரப்பட்டுள்ளதால் மூத்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனராம்.
சின்னத்துரை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆவார். முன்பு அதிமுகவில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணனுடன் இணைந்து செயல்பட்டவர். அவர் மூலம் வளர்ந்தவரும் கூட. பின்னர் அனிதா அதிமுகவை விட்டே வெளியேற்றப்பட்டார்.
பின்னர் அமைச்சர் சண்முகநாதனுடன் இருந்து அரசியல் செய்தார்.
சண்முகநாதன் பதவி பறிக்கப்பட்டு செல்லபாண்டியன் அமைச்சரானதால் சண்முகநாதனை விட்டு விலகி செல்லபாண்டியனுடன் இணைந்தார். இவர் வந்த நேரம் சில நாட்களிலேயே செல்லபாண்டியன் பதவி பறிபோனது.
இதனால் மீண்டும் அமைச்சர் சண்முகநாதனுடன் செல்லமுடியாமல் தனியாக அரசியல் செய்து வந்தார். தற்போது இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது இது கட்சியில் மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல சசிகலா புஷ்பா அமைச்சர் சண்முகநாதன் ஆதரவாளர் ஆவார். இவருக்கு சீட் தரப்பட்டது குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் பலரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனராம். சீனியர்கள் பலர் இருந்தும் சசிகலாவுக்கு சீட் தரப்பட்டது நியாயம் இல்லை என்று அவர்கள் புலம்புகிறார்களாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications