ஜெ.வுக்கும், தனது மகனுக்கும் சீட் கேட்டு ஒரே தொகுதிக்கு மனு கொடுத்த தூத்துக்குடி எம்.பி!
சென்னை: தூத்துக்குடி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடக் கோரி அதிமுக அமைப்பு செயலாளரும், எம்பியுமான நட்டர்ஜி விருப்ப மனுவை கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனிடம் வழங்கினார்.
அதிமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. வழக்கம் போல ஜெயலலிதாவுக்காக பலரும் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். கூடவே தங்களுக்கும் ஒரு மனுவைக் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து நட்டர்ஜி எம்.பி.யின் மகன் சாமுவேல் விருப்ப மனு கொடுத்துள்ளார். அதேசமயம், முதல்வர் ஜெயலலிதா தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நட்டர்ஜியும் ஒரு மனு கொடுத்துள்ளார்.
இதேபோல எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைச் செயலாளரும், செல்லப்பாண்டியன் எம்.எல்.ஏ.,வின் அண்ணன் மகனுமான ஞான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜம்மாளின் மகன் மனோகர் ஆகியோரும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., அரசு போக்குவரத்து கழக நிர்வாகி பொன்ராஜ் ஆகியோர் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடவும், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னப்பன், விளாத்திக்குளம் புதூர் ஊராட்சி குழுத்தலைவர் தனம் ஜெயம், மாவட்ட கவுன்சிலர் கருப்பூர் சீனி உட்பட பலர் விளாத்திக்குளம் தொகுதியில் போட்டியிட மனு அளித்துள்ளனர்.
வரும் 23ஆம் தேதி நிறைந்த பவுர்ணமி என்பதால் அன்று அதிக அளவிலான அதிமுகவினர் விண்ணப்ப மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications