தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- நாம் தமிழர் மாநில நிர்வாகி வியனரசு கைது
நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

நாம் தமிழர் மாநில நிர்வாகி வியனரசு கைது- வீடியோ
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களில் வன்முறை நடைபெற்றதாக கூறி ஏராளமானோரை நாள் தோறும் போலீஸ் கைது செய்து வருகிறது. ஆனால் வழக்கறிஞர்கள் குழு ஒன்று இவர்களை உடனுக்குடன் ஜாமீனில் எடுத்து வருகிறது.

இருந்தாலும் போலீசார் இடைவிடாமல் தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி ரத்தினபுரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசுவை சிப்காட் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் போராட்ட வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications