புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தூத்துக்குடி: உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 434 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் 434-வது ஆண்டு திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. திருவிழாவையொட்டி, இன்று காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 8.30 மணிக்கு கொடியேற்றம் தொடங்கியது. மதியம் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் சூட்டப்பட்டது.
வரும் 6ம் நாள் திருவிழாவான 31ம் தேதி காலை 7.30 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் புதுநன்மை, கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. ஆகஸ்ட் 4-ம் தேதி அன்று இரவு 7 மணிக்கு ஆயர் பெருவிழா மாலை ஆராதானை நடக்கிறது. அன்பின் இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.
திருவிழாவி்ன முக்கிய நிகழ்வான அன்னையின் பெருவிழா ஆகஸ்ட் 5ம் தேதி அன்னையின் பெருவிழாவான அன்று காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30மணிக்கு 2ம் திருப்பலியும், 7.30 மணிக்கு மதுரை முன்னாள் பேராயர் பீட்டர் பர்ணாண்டோ தலையில் பெருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது.
பகல் 12 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோனி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி நடக்கிறது. மாலை 5.30 மணியளவில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரன் தலைமையில் ஆடம்பர திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.
திருவிழாவிற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுக்கபட்டுள்ளது. திருவிழாவில் நகரில் உள்ள அனைத்து மண்ணின் மைந்தர்கள், குருக்கள், துறவியர், அருட்சகோதர, சகோதரிகள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை லெரின் டிரோஸ் தலைமையில் உதவி பங்குதந்தையர்கள் வினிஸ்டன், ஜெகதீஷ், மற்றும் பணிக்குழுவினர் செய்து வருகின்றன. ஆக.5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று நடைபெறும் பெருவிழாவில் பல லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications