ரஜினி எங்களை பார்க்க வந்திருக்கவே கூடாது: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள்
Recommended Video

தூத்துக்குடி: உரிமைக்காக போராடிய எங்களை ரஜினிகாந்த் சமூக விரோதிகள் என்று கூறியது வருத்தமாக உள்ளது என்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக விரோதிகள் ஊடுருவியதாலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்றார்.

அவரின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்கள் ரஜினியின் பேச்சால் மனமுடைந்து போயுள்ளனர்.
இது குறித்து காயமடைந்தவர்கள் கூறியிருப்பதாவது,
மருத்துவமனைக்கு வந்து சிரித்து சிரித்து பேசிவிட்டு வெளியே சென்று எங்களை சமூக விரோதிகள் என்று ரஜினி கூறியிருப்பது வருத்தமாக உள்ளது. அவர் மட்டும் பேட்டி கொடுத்து விட்டு வந்து எங்களை சந்தித்திருந்தால் அவர் கொடுத்த பணத்தை தொட்டுக் கூடப் பார்த்திருக்க மாட்டோம்.
அவர் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். உரிமைக்காக போராடுபவர்கள் சமூக விரோதிகளாகிவிட்டோமா?. அவர் எங்களை அசிங்கப்படுத்திவிட்டார். எங்களை பற்றி இப்படி நினைப்பவர் மருத்துவமனைக்கே வந்திருக்கக் கூடாது.
நாங்கள் குடும்பம், குடும்பமாக போராடினோம். நாங்கள் சமூக விரோதிகள் அல்ல என்று தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications