ஓயாத ஃபேஸ்புக் ஆபாச பட அட்டகாசம்... பதறும் பண்ருட்டி பெண்... தூத்துக்குடி கயவர்கள் கைது
கடலூர்: ஃபேஸ்புக்கில் ஆபாச படம் வெளியானதால் தற்கொலை செய்து கொண்டார் சேலத்தை சேர்ந்த இளம் பெண் வினுப்பிரியா. சென்னை சுவாதி கொலைக்கும் ஃபேஸ்புக் நட்புதான் காரணமாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
இப்போது கடலூர் மாவட்டத்தில் ஃபேஸ்புக் நட்பு மூலம் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் சுந்தரி. ஆபாச படம் அனுப்பிய இரண்டு கயவர்களை தூத்துக்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் கீழ்பட்டாம் பாக்கம் வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் சுந்தரி. பி.எஸ்.சி. பட்டதாரி. இவர் பண்ருட்டியில் உள்ள தனியார் கடையில் வேலை செய்து வருகிறார். தூத்துக்குடியை சேர்ந்த ஹரிஹரன், பிரபாகரன் ஆகிய இளைஞர்கள் சுந்தரிக்கு ஃபேஸ்புக் நண்பர்களாக அறிமுகமானார்கள்.
ஹரிகரன் பொறியியல் பட்டதாரி. தூத்துக்குடி மில்லர்புரம் சிலோன்காலனியை சேர்ந்தவர். இவர் பெங்களூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். பிரபாகரனும் அதே பகுதியை சேர்ந்தவர் ஆவார். அவர் தூத்துக் குடியில் கூலிவேலை செய்து வந்தார்.
இவர்கள் ஃபேஸ் புக்கில் பல தகவல்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் செல்போன் மூலமாகவும் பேசி வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக சுந்தரி அவர்களிடம் பேசுவதை தவித்தார்.
கடந்த சில மாதங்களாக இவர்களுக்கும் சுந்தரிக்கும் எந்த தொடர்பு இல்லை. தற்போது சுந்தரியின் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை சிலர் கண்டுபிடித்து சுந்தரியின் ஃபேஸ்புக் மூலமாக ஆபாச படங்கள் அனுப்பி கொலை மிரட்டல் விடுத்து வந்தனர்.
இதுகுறித்து சுந்தரியின் தந்தை நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதில் தன் மகளின் செல்போனுக்கு மர்ம மனிதர்கள் ஆபாச படங்கள் அனுப்பி மிரட்டி வருவதாக கூறியிருந்தார். இதையொட்டி நெல்லி குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் தூத்துக்குடியை சேர்ந்த ஹரிஹரன், பிரபாகரன் ஆகிய இருவரும் பேஸ்புக்கில் ஆபாச படங்களை சுந்தரிக்கு அனுப்பியது தெரியவந்தது. இதையொட்டி தனிப்படை போலீசார் தூத்துக்குடிக்கு விரைந் தனர். அங்கு ஹரிகரன், பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இவர்கள் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்கள். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து இவர்கள் இருவரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் ஆபாச படம் அனுப்ப துணையாக இருந்ததாக சென்னையை சேர்ந்த காவியா, ராம்பிரபு தூத்துக்குடியை சேர்ந்த சேகர், ஷியாம் பென்னி, சிவகாசியை சேர்ந்த முரளி, பாலா ஆகிய 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆபாச படம் வெளியானதால் சேலம் வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. இதன்பின்னர் இது போன்ற சைபர் கிரைம் குற்றங்களை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கூடா நட்பு கேடு தரும் என்பது பழமொழி... இனி ஃபேஸ்புக் நட்பு வாழ்க்கைக்கு குழி பறிக்கும் என்ற புது மொழியை அறிமுகப்படுத்த வேண்டியதான் போல. நட்புக்கு அக்செப்ட் கொடுக்கும் முன் யோசியுங்கள் பெண்களே!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications