சோமாலியாவில் தவிக்கும் தூத்துக்குடி கப்பல் ஊழியர் – மீட்கக் கோரி பெற்றோர் கண்ணீர்
நெல்லை: சோமாலியா கடல் கொள்ளையர்கள் பிடியில் சிக்கி தவிக்கும் தூத்துக்குடி கப்பல் ஊழியரை மீட்க வேண்டும் என அவரது பெற்றோர் கண்ணீர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மொசம்பாவில் இருந்து டார்பன் துறைமுகத்திற்கு கடந்த 2010இல் எம்வி ஆஸ்வால்ட் என்ற சரக்கு கப்பல் சென்றுகொண்டிருந்தபோது திடீரென சோமாலிய கடல் கொள்ளையர்கள் அந்த கப்பலை கடத்தினர்.
அதிலிருந்த 15 பேரில் 7 பேரை கடத்தி சென்றனர். கடத்தப்பட்டவர்களில் மும்பையை சேர்ந்த பகதூர் சிங், கேரளாவின் ஜார்ஜ் ஜேக்கப், பாஸ்கரன் நாயர், மகாராஷ்டிராவை சேர்ந்த மஞ்சித் சிங், தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் ஊழியர் டனிஸ்டன் உள்பட பலர் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
இவர்களை மீட்க குடும்பத்தினர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வரை சென்று முறையிட்டனர். மேலும் இவர்களை மீட்க கோரி பொதுமக்கள் சமூக நல அமைப்புகள், மாலுமிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயன் இல்லை.
இந்நிலையில் டனிஸ்டன் கடத்தி செல்லப்பட்டு மூன்றரை ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் இதுவரை டனிஸ்டன் மீட்கப்படவில்லை. இதனால் தூத்துக்குடியில் அவரது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.
கடந்த 5ம் தேதி டனிஸ்டன் தனது குடும்பத்தினருடன் பேசியுள்ளார். அப்போது அவர் எங்களுக்கு 2 நேர உணவு கூட சரியாக கிடைப்பதில்லை. குடிப்பதற்கு மழை நீர் மட்டுமே கிடைக்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிணை கைதிகளை விடுவிக்க கோடிக்கணக்கில் பிணை தொகை கேட்டு கடல் கொள்ளையர்கள் இமெயில் மூலம் கப்பல் கம்பெனிக்கு புகைப்படம் அனுப்பி வைத்துள்ளனர். இதில் டனிஸ்டன் உள்பட 7 பேர் உடல் மெலிந்து அழுக்கு படித்த ஆடைகளுடன் காணப்படுவது தெரிகிறது. ஈராக்கில் சிக்கிய நர்சுகளை மீட்டது போல் இவர்களையும் மீட்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications