தூத்துக்குடிக்கு வர 100 நாளாகுமா? இதுவும் ரஜினியிடம் கேட்டேன்- தூத்துக்குடி இளைஞர் சந்தோஷ் பரபர
Recommended Video

சென்னை: இந்தியாவையே அதிர வைத்த ரஜினிகாந்தை தெறிக்கவிட்ட 'யாருங்க நீங்க' என கேள்வி கேட்ட தூத்துக்குடி இளைஞர் சந்தோஷ் தாம் ஏன் அப்படி கேட்க நேர்ந்தது என்பதாக விளக்கம் அளித்திருக்கிறார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்று போலீசாரால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் ராஜ். இவர்தான் ரஜினிகாந்திடம் யாருங்க நீங்க என கேள்வி கேட்க, அவமானப்பட்ட ரஜினிகாந்த் சென்னை விமானத்தில் நிதானம் இழந்து பேசினார்.
சந்தோஷ் ராஜை தொடர்பு கொண்டு நக்கீரன் இதழ் பல்வேறு கேள்விகளை முன்வைத்தது. அதில் சந்தோஷ் ராஜ் அளித்துள்ள விளக்கம்:
யாருங்க நீங்கன்னு கூட கேட்கலை... யார் சார் நீங்கன்னு கேட்டேன். அதுக்கு நான்தாம்பா ரஜினிகாந்த் என்று ரியாக்சனுடன் பதில் சொன்னார்.
சென்னை டூ தூத்துக்குடிக்கு 100 நாளா?
அப்படியா.. எனக்கு தெரியாது சார்ன்னு நான் சொல்லிட்டு எங்க இருந்து வருகிறீங்கன்னு கேட்டேன்... நான் சென்னையில் இருந்து வாரேன் என்றார் ரஜினி. உடனே, சென்னையில் இருந்து இங்க வர 100 நாட்கள் ஆகுமான்னு கேட்டேன்.. உடனே போய்ட்டார். நான் ரஜினிகாந்தை நோக்கி இப்படி கேட்டது எதற்கு எனில், ரஜினி காந்த் போன்றவர்களுக்கு பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனி மரியாதை அதிகாரம் இருக்கிறது.

மக்களை சமூக விரோதி என்பதா?
நாங்க நடத்துன 100 நாள் போராட்டத்தில் அவர் ஒருநாள் கலந்துகிட்டு இருந்தா எங்களுக்கு பிளஸ் ஆக இருந்திருக்கும். அப்படித்தான் இல்லை போராட்டம் நடந்த 22-ந் தேதி வந்திருந்தாலும் சமூக விரோதிகள், சமூக விரோதிகள்னு போலீஸ் அடிச்சிருக்காது இல்லையா? எல்லோரையும் சமூக விரோதி, சமூக விரோதின்னு சொல்றதுதான் கஷ்டமா இருக்கு.. எங்களை சமூக விரோதி என சொல்கிற ரஜினிகாந்த் எதுக்கு எங்களை பார்க்க வந்தாரு? மக்களில் ஒருத்தராக பார்க்க வந்துவிட்டு வெளியே போய் சமூக விரோதின்னு சொல்றது எப்படி சரி?

அமைதி போராட்டம்தானே..
மக்களை யாரும் தூண்டிவிடலையே? யாரும் அரிவாள், கம்பு எடுத்துக்கிட்டு போராட்டத்துக்கு போகலையே..அறவழியில்தானே போராடினோம்.. இப்ப கூட எங்களை அடிச்சுட்டாங்க.. ஆனாலும் நாங்க இப்பவும் அறவழியில் போராடத்தானே விரும்புகிறோம் ரஜினிகாந்த் எங்களை பற்றிய பேசியது ரொம்பவே கொச்சைப்படுத்துவதாகவே இருக்கிறது. 144 தடை உத்தரவு விலக்கியும் 3 நாட்களாக ரஜினி வரவில்லை. அதனால்தான் அவரை கேள்வி கேட்டேன்.

அப்பட்டமான ஒடுக்குமுறை
100 நாட்களாக போராடினோம்.. அப்படின்னா 100 நாட்களும் 144 தடை உத்தரவா இருந்துச்சு? ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்காக அரசு எங்களை தாக்குவது என்பது ஒடுக்குமுறை. சுதந்திரப் போராட்டங்களில் தமிழகத்துக்கு பெரிய பங்கு.. அதன் பிறகும் தமிழகம் சிறப்பாகத்தான் இருக்கிறது.. மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இப்ப கூட எங்க கிராமத்தில் முதலாமாண்டு படிக்கிற பெண் கேன்சரில் இறந்து போயுள்ளது. அந்த பெண் என்ன புகை பிடிச்சதா என்ன?

நிச்சயம் ஸ்டெர்லைட் இயங்கும்
அமைச்சர், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸிடமும் நானே கேள்வி கேட்டேன். நான் அவர்களிடம் சரியான கேள்விகளைத்தானே கேட்டேன்.. எங்களுக்கான உரிமைகளுக்கான கேள்விகளைத்தான் கேட்டேன். 99 நாட்களாக போராடிய போது வராதவங்க, செத்து 10 நாட்களாக வராதவங்க இப்ப வருகிறாங்க.. அதனால்தான் கேள்வி கேட்கிறோம். நாங்க ஒன்றும் சந்தோசத்தில் இல்லை.. துக்கத்தில்தான் இருக்கிறோம். அப்படி என்கிற போது மக்களை சந்தோசப்படுத்த வருவது என்பது எப்படி? இப்பவும் ஸ்டெர்லைட் ஆடையை தமிழக அரசு சீல் வைத்திருந்தாலும் நிச்சயம் மீண்டும் அந்த ஆலை இயங்கும் என 100% நம்புகிறோம்.
-
“ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்த கூடாது..” ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு திருமாவளவன் பதிலடி! -
உடல்நிலை சரியில்லை என்று அரசியலுக்கு வராமல் தப்பினார்! ரஜினி பற்றி ப்ளூ சட்டை மாறன் பதிலடி! அடுத்த பஞ்சாயத்து -
ஆதவ் அர்ஜுனாவை பங்கம் செய்த அர்ஜுன மூர்த்தி.. ரஜினிகாந்த் குறித்து விஜய்க்கு பகிரங்க கடிதம் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications