அரிவாளால் வெட்டுப்பட்ட தூத்துக்குடி ஆசிரியர் உயிரிழப்பு – கலவர நிலையில் கொங்கராயங்குறிச்சி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அரிவாள் வெட்டுக்கு உள்ளாகிய ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் அங்கு பதற்றம் நிலவி வருகின்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியைச் சேர்ந்தவர் சாம் தேவசகாயம் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். கடந்த 16 ஆம் தேதி மாலையில் சாம் தேவசகாயம் தனது தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
வீட்டின் அருகில வந்தடைந்த அவரை திடீரென்று மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதனால் பலத்த காயம் அடைந்த சாம் தேவசகாயம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கைதனவர்கள் அனைவரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சாம் தேவசகாயம் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 8.30 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சாம்தேவசகாயம் சிகிச்சை பலனின்றி இறந்த தகவல் கொங்கராயகுறிச்சி பகுதியில் பரவியதும் உடனடியாக அப்பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து அங்கு 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அவர்கள் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சாம்தேவசகாயத்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று மாலை 4 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications