தூத்துக்குடியில் புதிய விமானப்படைத் தளம்.. புதுப்பிக்கப்படுகிறது 2ம் உலகப் போர் விமான நிலையம்
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையம் மற்றும் மகேந்திரகிரி இஸ்ரோ மையம் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகம் வலுத்து வருவதால், தூத்துக்குடியில் புதிய விமான தளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இ்தற்காக இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட விமானப்படை தளத்தை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு பூர்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன.
தமிழதத்தில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கனவே உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
முக்கியமாக கடல் மார்க்கமாக எளிதில் ஊடுருவல் நடக்கலாம் என்பதால் கடலோர காவல் படையினரும், மீனவர்களும் உஷாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை கடலோரங்களில் கூடங்குளம் அணு உலை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. மேலும் பணகுடி அருகே இஸ்ரோவின் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. விஜயநாராயணம் அருகே கடற்படை தளம் இயங்கி வருகிறது.

இந்த மூன்றும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு எப்போதும் இருக்கும். இந்த நிலையில் பதன்கோட்டில் கடும் காவலையும் மீறி தாக்குதல் நடந்ததால் இங்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. அதற்கு தகுந்தபோல் இஸ்ரோ மையத்தை சுற்றி கிளைடர் விமானம் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் மத்திய அரசு விமானப்படையின் நவீன ரேடார் சாதனைத்தை அனுப்பி வைத்துள்ளது. மேலும், விமானப்படை தளம் அமைப்பது தொடர்பான ஆய்வுக்காக ஸ்குவாட்ரன் லீடர் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். மேலும் ஒரு சுகோய் 30 ரக போர் விமானமும் அப்பகுதியில் வட்டமடித்தது. இந்த விமானம் தாழ்வாக வந்த போது பயங்கர இரைச்சல் சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், தஞ்சாவூர், கோவை, அரக்கோணம், சூலூரில் இருப்பது போல இப்பகுதியை மையமாக வைத்து தனி விமானப்படை தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பன்னீர்குளத்தில் இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட விமானப்படை தளம் உள்ளது.
இந்த இடத்தை கடந்த 2009ம் ஆணடு அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு சென்றனர். தற்போது இதை புதுப்பித்து அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போல தூத்துக்குடி விமான நிலையத்தை ஓட்டி விமானப்படைக்கு என்று தனியாக படைதளம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ விமானம் பறப்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தனர்.
ஆக தென் மாவட்டத்தில் விமானப்படை தளம் அமைவது உறுதியாகி வி்ட்டது. முன்பு சுதந்திரத்திற்கு முன்பு மதுரை விமான நிலையத்தை விமானப்படைத் தளமாக ஆங்கிலேய அரசு பயன்படுத்தி வந்தது நினைவிருக்கலாம். பின்னர் அது சிவில் விமான நிலையமாக மாற்றப்பட்டு விட்டது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications