மீனவர்களையும் படகுகளையும் மீட்கக் கோரி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட வாழ்வுரிமைக் கட்சி
சென்னை: இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், தமிழக மீனவர்களின் படகுகளையும் மீட்கக் கோரி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை தொடர்ந்து கைது செய்து சிறைகளில் அடைத்து வருகிறது. அவர்களது படகுகளையும் சிங்கள கடற்படை பறிமுதல் செய்து வருகிறது.

இந்த நிலையில், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும் அவர்தம் படகுகளையும் உடனே விடுதலை செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இன்று காலை 11.30 மணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தியது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமையில் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியும், படகுகளை விடுவிக்கக் கோரியும், இலங்கைக் கடற்படையைக் கண்டித்தும் கோஷமிட்டனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications