தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சுங்கச்சாவடி முற்றுகை... நூற்றுக்கணக்கானோர் கைது
கரூர்: கரூர் அருகே சுங்க சாவடிகளை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில் ஈடுபட் 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் ஏழை எளிய மக்களிடம் வழிப்பறி கொள்ளையடிக்கும் சுங்க சாவடிகளை கண்டித்து தமிழகத்தில் உள்ள 41 சுங்க சாவடிகள் முன்பு முற்றுகைப் போராட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று நடைபெறும் என தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் மொத்தம் 41 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 29 சுங்கச் சாவடிகளில் தனியாரும் 12 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன.
இந்த சாவடிகளை இன்று பண்ருட்டி வேல்முருகன் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சுங்கச் சாவடிகளில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கரூர் மாவட்டம், மணவாசி டோல்கேட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட சென்றனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி பாலா சிறப்புரையாற்றினார்.

அவர் கூறுகையில், தமிழகத்தில் ஏழை, எளிய மக்களை கொள்ளையடிக்கும் பொருட்டு சுங்கச் சாவடிகள் நடந்து கொண்டு வருகின்றன. ஆனால் அடிப்படை வசதிகள் சுங்கச்சாவடிகளில் ஏதும் இல்லை. ஆதலால் மத்திய அரசின் இந்த சட்ட விரோத கொள்கையை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம்.
ஆந்திர அரசு காட்டுமிராண்டித்தனமாக தமிழர்கள் 20 பேரை சுட்டுக் கொண்டதற்கு வன்மையாக கண்டிக்கிறோம். உயிரிழந்த தமிழர்களுக்கு ஆந்திர அரசு தக்க நிவாரணம் வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications