சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த தவெக MLA.. திரும்பி பார்த்துவிட்டு நிற்காமல் சென்ற புஸ்ஸி ஆனந்த்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தவெக சைக்கிள் பேரணியின் போது கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா தடுமாறி கீழே விழுந்தார். அமைச்சரும் தவெக பொதுச்செயலருமான என். ஆனந்த், எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா கீழே விழுந்ததைக் கவனித்தும் சைக்கிளை நிறுத்தாமல் தொடர்ந்து சென்றார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தாராபுரத்தில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து அமைச்சர்கள் மற்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

TVK Cycle Rally MLA Jaganath Mishra Falls Minister N Anand Rides On Without Stopping

இடைதேர்தல் நடைபெறும் 2 தொகுதிகள் இடையே சைக்கிள் பேரணி தவெக சார்பில் இன்று தொடங்கப்பட்டது. தாராபுரத்தில் அமைந்துள்ள தவெக தேர்தல் பணிமனையில் இருந்து தொடங்கிய இந்தப் பயணம், பல்வேறு பகுதிகள் வழியாக தொடர்ந்து சென்று, மதுராந்தகத்தில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக தேர்தல் பணிமனையில் நிறைவடைகிறது.

இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வுடன் வாக்களிப்பதன் அவசியம், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுதல் மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் இந்த சைக்கிள் பயணம் நடைபெறுகிறது.

அமைச்சர்கள் என். அனந்த், அருண்ராஜ், முகமது பர்வேஸ் ஆகியோர் தாராபுரம் பகுதியில் இருந்து இன்று சைக்கிள் பேரணியைத் தொடங்கினர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தவெக எம்.எல்.ஏக்கள், தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இந்த சைக்கிள் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சைக்கிளில் இருந்து தடுமாறி கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா கீழே விழுந்தார்.உடனே அருகில் இருந்தவர்கள் அவரைப் பத்திரமாகத் தூக்கிவிட்டனர்.

தவெக எம்எல்ஏ கீழே விழுந்ததைக் கவனித்த அமைச்சர் அருண்ராஜ் உடனே தனது சைக்கிளை நிறுத்தினார். இருப்பினும், நீர்வளத்துறை அமைச்சரும் தவெக பொதுச் செயலாளருமான என். ஆனந்த், எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா கீழே விழுந்ததைக் கவனித்தும் சைக்கிளை நிறுத்தாமல் தொடர்ந்து முன்னேறிச் சென்றார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+