கட்சி நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அதிகாரிகளுடன் அமர்ந்த தவெக நிர்வாகி!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் விக்னேஷ் இன்று நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், எந்த அரசு பொறுப்பிலும் இல்லாத தவெக மாவட்ட செயலாளர் தர்மராஜ் அமைச்சர், அதிகாரிகளுக்கு இணையாக அமர்ந்திருந்தது சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட பொறுப்பு அமைச்சராக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முதன்முதலாக இன்று திண்டுக்கல் வந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் விக்னேஷ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

TVK District Secretary Participated With Minister in Official Meeting Draws Criticism

இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, எஸ்.பி பிரதீப், திண்டுக்கல் எம்.பி சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த அரசு நிகழ்வில் அமைச்சர் விக்னேஷுக்கு இணையாக, எந்த அரசு பதவியிலும் இல்லாத தவெக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மா என்கிற தர்மராஜ் அமர்ந்திருந்தார்.

தவெக மாவட்ட செயலாளரை எப்படி அரசு நிகழ்ச்சியில் அமைச்சருக்கு இணையாக அமர முடியும் என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அரசு ஆய்வுக் கூட்டத்தில், கட்சி ஆலோசனைக் கூட்டம் போன்று ஆளுங்கட்சி மாவட்ட செயலாளரை அமர வைத்தது அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கட்சியினருக்கு இப்படி அரசு விவகாரங்களில் தலையிட ஊக்கமளிப்பதால், கட்சி நிர்வாகிகள், அரசு நிர்வாகத்தில் முழுமையாக தலையிட வாய்ப்புள்ளது. இந்த செயலை ஊக்குவிக்கக்கூடாது. கடந்த திமுக, அதிமுக ஆட்சிக்காலங்களில் கூட கட்சி நிர்வாகிகள் யாரும் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட அதிகாரிகளுக்கு இணையாக அமர்ந்து துறை ரீதியான ஆய்வில் ஈடுபட்டதில்லை என அதிகாரிகள் பொருமித் தீர்த்துள்ளனர்.

இதுஒருபுறமிருக்க, திண்டுக்கல் வந்த மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷை சந்திப்பதில் தவெகவினரிடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டு மாவட்ட செயலாளருக்கு எதிராக ஒரு தரப்பினர் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட செயலாளரை மாற்ற வேண்டும் என தவெகவினர் முழக்கங்களை எழுப்பினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+