தவெக என்பது கட்சியல்ல.. குற்றவாளிகளின் மொத்தக் கூடாரம்.. ஸ்டாலின் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக நிர்வாகிகள் மீதான அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியின் தூய்மையான அரசியல் வாக்குறுதி கேள்விக்குள்ளாக்கி ஆங்கில நாளிதழில் இன்று ஒரு கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. தவெக நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளதாகவும், தனது கட்சியினரைக் கட்டுப்படுத்த முதல்வர் விஜய் தயாராக இருக்கிறாரா? என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.இந்த கட்டுரையை பகிர்ந்து இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் மொத்த கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

டைம் ஆப் இந்தியா நாளிதழில் இன்று வெளியாகி உள்ள ஆங்கில கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: "குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சங்கடமான கேள்வி எழுகிறது. தனது சொந்தக் கட்சியினரையும் பொறுப்பேற்கச் செய்யும் துணிச்சல் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு இருக்கிறதா?

TVK is not a political party it is a den for criminals criticizes MK Stalin

விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தில், தமிழ்நாட்டுக்கு ஏற்கெனவே இருக்கும் அரசியல் நடைமுறைகளில் இருந்து மாறுபட்ட ஓர் அரசியல் மாற்றத்தை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். தூய்மையான அரசியல், கட்சியை விட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியல் கலாச்சாரம் ஆகிய வாக்குறுதிகள்தான் தவெகவின் அரசியல் ஈர்ப்புக்கு முக்கியக் காரணங்களாக இருந்தன.

ஆனால், ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்குள்ளேயே அந்த வாக்குறுதிகள் வலுவிழந்து வருவதாகத் தெரிகிறது. பாலியல் குற்றங்கள், பாலியல் துன்புறுத்தல், தாக்குதல், திருட்டு முயற்சி, ஊழல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் என தவெக நிர்வாகிகள் மீதான புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

இவை அடையாளம் தெரியாத சாதாரண கட்சித் தொண்டர்கள் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல. சட்டப்பேரவை துணை சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள், இளைஞரணிப் பொறுப்பாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் எனப் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்களின் பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கையும், அவை கட்சியின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களைச் சுற்றி எழுவதும், இவற்றைத் தனிநபர்களின் எப்போதாவது நிகழும் தவறுகள் என்று கட்சி இனியும் புறக்கணிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மாதம் வாரியாக வெளியான குற்றச்சாட்டுகள்

ஜூன்:

தூத்துக்குடி மேற்கு மாவட்ட தவெக இளைஞரணி அமைப்பாளரான பாலமுருகன், வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக மற்றொரு கட்சி நிர்வாகியுடன் கைது செய்யப்பட்டார்.

ஜூலை:

மாம்பாக்கம் ஊராட்சித் தலைவரான வீரசாமி, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் கேட்டதாகக் கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட்:

சோளிங்கர் தொகுதி தவெக எம்எல்ஏ ஜி. கபில் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் செய்தியாளர்களைத் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

செப்டம்பர்:

கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் ஜே. பத்மஜாவுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அக்டோபர்:

நாகப்பட்டினம் மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினரான என். பூபாலன், கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்த முயற்சியில் தொடர்புடையதாக மாவட்ட வருவாய் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்ட செயற்குழு உறுப்பினரான கிறிஸ்டோபர், கல்லூரி மாணவி ஒருவருக்கு காரில் லிஃப்ட் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டார்.

இதற்கு முன்பாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு கட்சி நிர்வாகிகள், தனித்தனி சம்பவங்களில் செயின் பறிக்க முயன்றது, பின்தொடர்ந்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நவம்பர்:

நவம்பர் மாதத்திலும் குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.

காரமடை ஒன்றிய தவெக செயலாளர் கருப்புசாமி மீது, கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், சாதிய ரீதியிலான அவதூறு மற்றும் மிரட்டல் விடுத்ததாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

துறையூர் தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை துணை சபாநாயகருமான எம். ரவிசங்கர், தனது குறையைக் கூற வந்த ஒருவரைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை நீக்குவது மட்டுமே தீர்வாகிவிடுமா?

வீரசாமி, பூபாலன், கிறிஸ்டோபர் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், கைது செய்யப்பட்ட பிறகோ, பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்த பிறகோ குறிப்பிட்ட சிலரை மட்டும் கட்சியிலிருந்து நீக்குவது, முறையான பொறுப்பேற்பு நடைமுறைக்கு மாற்றாகிவிடாது. அதிகாரப் பொறுப்புகளில் இத்தகைய நபர்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற பெரிய கேள்விக்கும் இது பதிலளிக்கவில்லை.

மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் விஜய் மௌனம் ஏன்?

மிகவும் அவமானகரமான விஷயம் என்னவென்றால், தவெகவின் அருள் விக்னேஷ் தொடர்ந்து எம்எல்ஏவாக நீடிக்கிறார். ஆனால், மாவட்ட ஆட்சியரோ கிட்டத்தட்ட மௌனமாக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்காகக் கூட அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. எம்எல்ஏவின் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது. ஆனால், இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை.
சட்டப்பேரவையில் தனது கட்சியின் பலம் மேலும் குறைந்துவிடும் என்பதால், அந்த எம்எல்ஏவைப் பதவி நீக்கம் செய்ய விஜய் தயங்குகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.

இறுதிப் பொறுப்பு விஜய்யிடமே இருக்கிறது!

இந்த விவகாரங்களில் இறுதிப் பொறுப்பு விஜய்யையே சாரும். ஆனால், முக்கியமான விவகாரங்களில் கட்சித் தலைவர் மௌனம் காப்பதாகவும், அவருக்குப் பதிலாக ஒரு சில அமைச்சர்களே பேசுவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அந்த அமைச்சர்களின் முதல் பதிலும், பல நேரங்களில் ஒரே பதிலும், முந்தைய ஆட்சியைக் குறை கூறுவதாகவே இருக்கிறது.

ஆட்சியில் இருக்கும் ஒவ்வொரு கட்சியிலும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், மற்றவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி தப்பித்துக்கொள்வது, வித்தியாசமான அரசியலை முன்னிறுத்துவதாகக் கூறும் கட்சிக்கு அழகல்ல. விஜய்யின் மௌனம் அலட்சியமாகப் பார்க்கப்படுவதுடன், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்குக் கட்சித் தலைமை மறைமுகப் பாதுகாப்பு அளிக்கிறதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

தன்னை ஒரு மாற்று அரசியல் தலைவராக முன்னிறுத்திக்கொள்ளும் முதல்வர் விஜய், அதைச் செயலிலும் காட்ட வேண்டும். அதுவும் உறுதியான நடவடிக்கைகள் மூலம் காட்ட வேண்டும்" இவ்வாறு ஆங்கில கட்டுரையில் விமர்சனங்கள் உள்ளன. இந்த கட்டுரையின்று இறுதி சாரம்சம் என்னவெனறால் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சிலரை நீக்குவது மட்டும் போதாது என்றும், தனது கட்சியினரின் செயல்களுக்கு முதலமைச்சர் விஜய் நேரடியாகப் பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகிறது.

இந்த கட்டுரையை பகிர்ந்து தான் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், ன், த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் மொத்த கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது என்று விமர்சித்துள்ளார். பொதுவாக திமுக நிர்வாகிகளும், நாதக நிர்வாகிகளும் தான் தவெக குற்றவாளிகளின் கூடாரம் என்ற பாணியில் விமர்சித்து வந்தார்கள்.இப்போது நேரடியாக திமுக தலைவர் ஸ்டாலினே விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+