For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வுடன் வேல்முருகன் சந்திப்பு- அதிமுக கூட்டணியில் வாழ்வுரிமைக் கட்சி!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இணைந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவை இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி. வேல்முருகன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பிரசாரம் செய்வதாக வேல்முருகன் தெரிவித்ததாக அவரது கட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamizhaga Vazhvurimai Katchi leader Velmurugan meets Jaya, extends his party's support to AIADMK

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திமுகவின் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேல்முருகனை நேரில் சந்தித்து திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை வேல்முருகன் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினார்.

ஆனால் ஓ.பன்னீர்செல்வத்துடனான சந்திப்பை வேல்முருகன் மறுத்திருந்தார். இந்நிலையில் வேல்முருகன், ஜெயலலிதாவை சந்தித்து பேசி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

English summary
TVK founder T. Velmurugan today met Tamilnadu Chief Minister Jayalalithaa in Chennai. During this meeting Velmurugan said to Jayalalithaa his party will support ADMK lead alliance for upcoming lok sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X