தமிழகத்தின் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க தைத் திருநாளில் சபதமேற்போம்: வேல்முருகன்
சென்னை: தமிழகத்தை சூழ்ந்துள்ள பேராபத்தான சூழலை முறியடித்து தமிழர்களின் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க பொங்கல் திருநாளில் சபதமேற்போம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச்செய்தி:
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த தமிழர் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தைத் திருநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நன்னாளில் தமிழகத்தின் மீது படையெடுத்திருக்கும் கூடங்குளம் அணு உலை, மீத்தேன் திட்டம், நியூட்ரினோ உள்ளிட்ட அனைத்து நாசகார திட்டங்களையும் விரட்டியடிப்போம் என்று உறுதியேற்போம்.
தமிழகத்தின் நான்கு முனைகளிலும் பிற மாநிலங்களால் நமது வாழ்வுரிமைகள் காவு கொள்ளப்பட்டும் கபளீகரம் செய்யப்பட்டும் கொண்டிருக்கிற சூழல்தான் இப்போது உள்ளது. இந்த பேராபத்தான சூழலை முறியடித்து தமிழ்நாட்டின் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க இன்றைய திருநாளில் சபதமேற்போம்.
இலங்கையில் ஈழத் தமிழர் வாக்குகளால் அமையப்பெற்ற புதிய அதிபர் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையிலாவது தமிழ்நாட்டு மீனவ சொந்தங்களின் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நாம் உறுதியேற்போம்.
மத்தியில் அமைந்துள்ள இந்தியப் பேரரசோ முன்னெப்போதும் இல்லாத வகையில் சமஸ்கிருத திணிப்பு, இந்தித் திணிப்பு, இந்துத்துவா திணிப்பு என மிகவேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதர்களை வேட்டையாடும் இந்த இந்துத்துவா கும்பலின் முயற்சிகளை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தி தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டு மண் இதுவென நிரூபிப்போம்!
தமிழ்நாட்டின் அனைத்து வாழ்வுரிமை பிரச்சனைகளிலும் ஜாதி, மத, கட்சி எல்லைகளைத் தாண்டி அனைத்து ஜனநாயக சக்திகளுடம் கடந்த காலங்களைப் போல தமிழர்களாக ஓரணியில் ஒன்று திரண்டு நம் வாழ்வுரிமகளை மீட்க இப்புத்தாண்டு நன்னாளில் சபதமேற்போம்.
அனைத்து தமிழக மக்களுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு- தைத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications