தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை!

புழல் சிறையில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: புழல் சிறையில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1-ம் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சிலர் தாக்கினர்.

TVK leader Velmurugan released from Puzhal jail in Conditional bail

இதேபோல நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் வேல்முருகன் உள்ளிட்ட பலர் மீது நெய்வேலி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த 2 வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட வேல்முருகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் கோரி வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டு வழக்குகளிலும் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் புழல் சிறையில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுங்கச்சாவடி, என்எல்சி முற்றுகை வழக்கில் நிபந்தனை ஜாமீன் கிடைத்ததையடுத்து விடுதலையானார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+