அரசுப் பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி.. ஆய்வும் செய்ததால் சர்ச்சை!

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: அரசுப் பள்ளி வளாகத்தில் தவெக மாவட்ட இணை செயலாளர் அகிலன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குன்னலூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அதிகாரத் தொனியில் ஆய்வும் மேற்கொண்டுள்ளார். மக்கள் பிரதிநிதியாகவும், அரசு அதிகாரியாகவும் இல்லாத ஒருவர் பள்ளிகளில் ஆய்வு செய்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்ட தவெக துணை செயலாளர் அகிலன். இவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், குன்னலூர் ஊராட்சி, எக்கல் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்று, பள்ளியில் உள்ள குடிநீர் வசதி மற்றும் கட்டிடப் பராமரிப்பு நிலையை ஆய்வு செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மக்கள் பிரதிநிதியாகவோ, அரசு அதிகாரியாக இல்லாட நிலையில் ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

TVK Leader s Birthday Celebration at Government School Sparks Controversy in Thiruvarur

அத்துடன் திருவாரூர் மாவட்ட தவெக துணை செயலாளர் அகிலன் தனது பிறந்தநாளை இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தவெக நிர்வாகியான அகிலன், ஆளுங்கட்சிக்காரர் என்ற அதிகாரத்தில் அட்டகாசம் செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+