அதிமுகவை ஆதரிக்கிறது வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி?
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவை ஆதரிக்க தி. வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் இடதுசாரிகள் ஏற்கெனவே இடம்பெற்றுள்ளன. திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பாரதிய ஜனதா அணியில் மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இணைந்துள்ளது. தேமுதிக, பாமக இன்னமும் முடிவு அறிவிக்கவில்லை.
இந்த இரண்டு கட்சிகளும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் திமுக, தேமுதிகவுக்கு பதிலாக விஜயகாந்தின் எதிரியாகிப் போன லியாகத் அலிகானை சேர்த்துக் கொண்டது.

வேல்முருகனுடன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சந்திப்பு
அதேபோல் கடந்த 28-ந் தேதியன்று பாமகவில் இருந்து பிரிந்து போய் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை நடத்தி வரும் வேல்முருகனை திமுகவின் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சந்தித்து பேசியிருந்தார்.

திருமா, ஜவாஹிருல்லா அழைப்பு
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா ஆகியோரும் திமுக அணிக்கு வர அழைப்பு விடுத்ததாக வேல்முருகன் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து உஷாரான அதிமுக தரப்பு வேல்முருகனை தொடர்பு கொண்டது.

ஓ.பி.எஸ். வீட்டில் ஆலோசனை
அதிமுகவின் அழைப்பை ஏற்று நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் 2 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக பதில்
எதிர்வரும் லோக்சபா தேர்தலில் அதிமுகவை ஆதரிக்குமாறும் சட்டசபை தேர்தலில் தேவையான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தரலாம் என்றும் அதிமுக தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவைத்தானே ஆதரிக்க முடியும்..
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள், பாமக மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன்தான் நாங்கள் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறோம். பாஜகவுடன் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக- காங்கிரஸ் இடையே மீண்டும் கூட்டணி உருவாகலாம் என்ற நிலை இருக்கிறது. அத்துடன் கடந்த 2 ஆண்டுகாலமாக ஈழப் பிரச்சனையில் திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறோம். இதனால் திமுக அணியில் இணைய முடியாது. எனவே எங்கள் முன்பு உள்ள ஒரே ஒரு வாய்ப்பு அதிமுக அணியை ஆதரிப்பதுதான் என்கின்றனர்.

பிப்ரவரி 23-ல் முடிவு
மேலும் சேலத்தில் வரும் 23-ந் தேதி நடைபெற உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மாநாட்டில் கூட்டணி முடிவை வேல்முருகன் அறிவிக்க இருக்கிறார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications