7 தமிழர் விடுதலை.. கோட்டையை நோக்கி பெரும் திரளாக அணி வகுத்து வாருங்கள்.. வேல்முருகன் கோரிக்கை
சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலைக்கான கோட்டையை நோக்கிய வாகனப் பேரணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கும். அதேபோல தமிழர்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

ராஜிவ் வழக்கில் கால் நூற்றாண்டு காலமாக சிறையில் வாடி வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்வதற்காக வேலூரில் இருந்து சென்னை புனிதஜார்ஜ் கோட்டை நோக்கி ஜூன் 11-ந் தேதி இருசக்கர வாகனப் பேரணியை ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த வாகனப் பேரணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் பங்கேற்கிறது.
7 தமிழரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்து மத்திய அரசிடம் கருத்து கோரியது. ஆனால் மத்திய அரசோ 7 தமிழர் விடுதலைக்கு எதிராக இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான் அரசியல் சாசனம் 161-வது பிரிவின் படி தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் ஜூன் 11-ந் தேதியன்று ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம் சார்பில் இந்த மாபெரும் வாகனப்பேரணி நடைபெற உள்ளது.
கடந்த 25 ஆண்டுகாலமாக மனித உரிமைக்கான அறப்போரை முன்னெடுத்து நடத்தி வரும் அற்புதம் அம்மாள் அவர்கள் தலைமையிலான இந்த வாகனப் பேரணியில் தமிழர்கள் பெருந்திரளாக பங்கேற்று நீதிக்காக; 7 தமிழர் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன்.
இப்பேரணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேலூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications