பாலாற்றின் குறுக்கே தடுப்பணை உயரத்தை ஆந்திரா அதிகரிப்பதை கண்டித்து த.வா.க. போராட்டம்
வேலூர்: பாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரத்தை ஆந்திரா அதிகரிப்பதைக் கண்டித்து பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகம்- ஆந்திரா எல்லையான புல்லூரில் பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு தடுப்பணை ஒன்றை கட்டியுள்ளது. இத்தடுப்பணை மூலம் தமிழக விவசாயிகளின் 2,500 ஏக்கர் நிலம் பயனடைந்து வருகிறது.

தற்போது திடீரென புல்லூர் தடுப்பணையின் உயரத்தை 10 முதல் 15 அடியாக உயர்த்தும் நடவடிக்கையில் ஆந்திரா ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே புல்லூர் அருகே திம்மம்பேட்டையில் ஆந்திராவின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று கண்டனப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வேல்முருகன், தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதை ஆந்திரா அரசு கைவிடாவிட்டால் தமிழகத்தில் ஆந்திரா அரசு நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களும் இயங்க முடியாத அளவுக்கு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications