ஸ்டிக்கர் அரசியல்.. திமுகவின் பழைய திட்டங்களை.. புதியது போல ரீமேக் செய்யும் தவெக.. நீளும் லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரஸ்யமானது. ஆனால், இன்றைய சூழலில் அது 'மாற்றம்', 'முன்னேற்றம்' என்கிற பெயரில் இருந்து விடுபட்டு.. வெறும் 'ரீ-மேக்' அரசியலாக மாறிக்கொண்டிருப்பதுதான் வேதனை. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகைக்குப் பின், சமூக வலைதளங்களில் அக்கட்சியினர் முன்னெடுத்து வரும் பிரச்சாரங்கள், 'பழைய செய்தியைப் புதியது போலத் திரிக்கும்' வித்தையாகவே தெரிகிறது. "விஜய் வந்ததும் அதிரடி ஆரம்பம்" எனப் பறக்கும் ஹேஷ்டேக்குகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? சற்று விரிவாகப் பார்ப்போம்.

டாஸ்மாக் 21 வயது விதிமுறை: 2003-லேயே போட்ட கோடு!

இன்று காலை தவெக அரசு, "டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்குக் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது" என ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்த தவெக தம்பிகள், ஏதோ புதிய புரட்சியே வெடித்துவிட்டது போலக் கொண்டாடுகிறார்கள். ஆனால், சட்டப் புத்தகத்தைத் திருப்பிப் பார்த்தால் உண்மை வேறு.

TVK Vijay Sticker Politics Rebranding Old Schemes as New Success

Tamil Nadu Liquor Retail Vending (in Shops and Bars) Rules, 2003-ன் விதி 11-A படி, 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பது ஏற்கனவே தடை செய்யப்பட்ட ஒன்றுதான். இதைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையும் பலமுறை உறுதி செய்துவிட்டது. 2006ல் இதை தீவிரமாக மீண்டும் அமல்படுத்தி, அடையாள அட்டைகளை கூட கேட்டனர். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒரு விதியை, ஏதோ தாங்கள் புதிதாகக் கண்டுபிடித்தது போலத் தம்பட்டம் அடிப்பது எந்த ரகம்?

சேலம் பைக் ரோந்து: திமுக போட்ட ஸ்கெட்ச்!

சேலம் மாநகரக் காவல் துறையினர் இப்போது பைக்கில் ரோந்து செல்வதைப் பார்த்துவிட்டு, "விஜய்வந்ததும் பாதுகாப்பு பலமாகிவிட்டது" என தவெகவினர் 'ரீல்ஸ்' போட்டு வருகின்றனர். ஆனால், கொஞ்சம் பிளாஷ்பேக் சென்றால், 2026 ஜனவரி மாதமே அப்போதைய திமுக அரசு இந்தத் திட்டத்தை மிக விரிவாகத் தொடங்கிவிட்டது. குறுகலான வீதிகள், நெரிசல் மிகுந்த சந்தைகளில் குற்றங்களைத் தடுக்க திமுக போட்ட அதே ஸ்கெட்ச்சைத்தான், இன்று தவெக ஸ்டிக்கர் ஒட்டித் தனது சாதனையாகக் காட்டிக் கொள்கிறது.

மதுவிலக்கு ஆய்வு: பழைய பாதையில் ஒரு ரவுண்ட்!

மதுவிலக்கு என்பது தவெக-வின் பிரதான முழக்கம். "நாங்கள் வந்ததும் மதுக்கடைகளை அகற்ற ஆய்வு நடத்துகிறோம்" என இப்போது ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள். ஆனால், 22.06.2023-ல் கொடுத்த வாக்குறுதியின்படி திமுக அரசு ஏற்கனவே 500 டாஸ்மாக் கடைகளை அதிரடியாக மூடிவிட்டது. மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த கடைகள் எப்போதோ அகற்றப்பட்டுவிட்டன. ஏற்கனவே திமுக செப்பனிட்ட பாதையில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, இப்போதுதான் முதல்முறையாக ஆய்வே நடப்பது போலக் கதையளப்பது அப்பட்டமான 'பித்தலாட்டம்'.

வரலாற்றை மறந்த 'முதல் பெண் அமைச்சர்' மாயை!

தவெக அமைச்சரவையில் கீர்த்தனா அமைச்சராகப் பொறுப்பேற்றதும், "தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர்" என ஒரு வினோதமான பிரச்சாரத்தைத் தவெக ஐடி விங் முன்னெடுத்தது. தமிழக அரசியல் வரலாற்றைத் தப்பித் தவறிக்கூட இவர்கள் புரட்டிப் பார்க்கவில்லை என்பது இதிலேயே தெரிகிறது.

முதலமைச்சர் என்கிற அந்தஸ்தில் தமிழகத்தையே ஆண்ட ஜெயலலிதா முதல், சுப்புலட்சுமி ஜெகதீசன், பாப்பா சுந்தரம், வளர்மதி வரை எனப் பெண் அமைச்சர்களின் பட்டியல் மிக நீளம். பிம்பங்களை உருவாக்க வரலாற்றைத் திரிப்பது என்பது ஒரு அரசியல் இயக்கத்திற்கு ஆரோக்கியமானதல்ல.

வெள்ளை அறிக்கை & பழைய வீடியோக்கள்!

"அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை" என்பது தவெக-வின் புதிய கண்டுபிடிப்பாகச் சொல்லப்படுகிறது. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலும் சரி, கடந்த திமுக ஆட்சியில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த அறிக்கையும் சரி, மிகத் தெளிவான தரவுகளைக் கொண்டிருந்தன.

அதேபோல், லாரி லாரியாகக் குட்காவை ஏற்றி வந்து கொளுத்தும் ஒரு வீடியோ இப்போது வைரலாகிறது. இது கடந்த திமுக ஆட்சியில் காவல்துறையால் முறைப்படி பறிமுதல் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பழைய வீடியோ. பழைய காணொளியைத் தூசு தட்டி எடுத்து, இப்போது எரிக்கப்பட்டது போலக் காட்டி லைக்ஸ் வாங்கும் 'எடிட்டிங்' அரசியல் எத்தனை நாளைக்குத் தாங்கும்?

அரசியலில் 'மாற்றம்' என்பது வெறும் முக மாற்றமாக மட்டும் இருக்கக் கூடாது, அது செயல்பாட்டில் இருக்க வேண்டும். அடுத்தவர் வீட்டுப் பிள்ளைக்குத் தனது பெயரை வைப்பது போல, திமுகவின் திட்டங்களுக்குத் தவெக ஸ்டிக்கர் ஒட்டுவது அந்த இயக்கத்திற்கு அழகல்ல. விளம்பர வெளிச்சம் குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் கைகொடுக்கலாம், ஆனால் நீண்ட காலத்திற்கு மக்கள் மன்றத்தில் 'ஒரிஜினாலிட்டி' மட்டுமே ஜெயிக்கும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+