அஜீத், விஜய்யை மறந்து டிராபிக் ராமசாமியை ஆதரியுங்கள்: ட்விட்டரில் உருகும் மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு ட்விட்டரில் ஆதரவு பெருகி வருகிறது.

சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் வீரமணிக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது காரை சேதப்படுத்தியதாகக் கூறி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் முதலில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டிராபிக் ராமசாமிக்கு ஆதரவு தெரிவித்து பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் #WeStandWithTrafficRamasamy என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்து வருகிறார்கள். அந்த ட்வீட்களில் சில இதோ,

ஜே. அன்பழகன்

83 வயதாகும் சமூக ஆர்வலர் அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பினாமி அரசில் மூத்த குடிமக்களுக்கு மதிப்பு இல்லை, #WeStandWithTrafficRamasamy என்று திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் ட்வீட் செய்துள்ளார்.

அஞ்சனா ரங்கன்

குற்றவாளிகளை எல்லாம் அவர்கள் விட்டுவிடுவார்கள்...நல்ல காரணத்திற்காக பாடுபடும் வயதானவரை அதுவும் அதிகாலை 4 மணிக்கு கைது செய்வார்கள்! இதை பொறுத்துக் கொள்ள முடியாது! #WeStandWithTrafficRamasamy என்று அஞ்சனா தெரிவித்துள்ளார்.

செழியன் ராமலிங்கம்

டெல்லி மக்கள் அன்னா ஹஸாரேவுக்கு அவ்வளவு மரியாதை அளிக்கையில் நாம் சென்னை மக்கள் ஏன் இவருக்கு கொஞ்சம் மரியாதை அளிக்கக் கூடாது, #WeStandWithTrafficRamasamy.

உத்தமன்

இன்று ஒரு நாளாவது அஜீத்தையும். விஜய்யையும் மறந்து இந்த நிஜ ஹீரோவுக்கு சப்போர்ட் செய்யுங்கள் மக்களே #WeStandWithTrafficRamasamy.

விஜய் ஆத்ரேயன்

#WeStandWithTrafficRamasamy. இத்தகைய உயர்வான நடவடிக்கையை எடுத்ததற்காக தமிழக போலீசாருக்கு சல்யூட். வேறு அர்த்தத்தில் இதை எடுத்துக் கொள்ளவும்.

தங்கவேல்

நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ ! #WeStandWithTrafficRamasamy

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+