இனிமேல் டிவிட்டர் கீச்சுகளை கூகுள் காண்பிக்கும்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: டிவிட்டரில் வெளியிடப்படும் கீச்சுகள், இனிமேல் கூகுள் தேடுபொறியில் பார்க்க முடியும். இதற்கான வசதியை கூகுள் செய்துள்ளது.

டிவிட்டரில் வெளியிடப்படும் கீச்சுகளை, டிவிட்டர் சர்ச் மூலமாக கண்டறியலாம். ஆனால் 'கூகுள் சர்ச்' மூலம் தேடும்போது, டிவிட்டரில் வெளியாகும் கீச்சுகளை காண முடியாது. அதே நேரம் பேஸ்புக்கிலுள்ள அம்சங்களை கூகுள் சர்ச் மூலம் கண்டுபிடிக்க முடிகிறது.

Tweets now visible on Google search

இந்நிலையில், டிவிட்டர் அம்சங்களையும் கூகுள் மூலம் கண்டறிய நடவடிக்கை, எடுக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு NASA என்று கூகுளில் சர்ச் செய்தால், நாசாவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கை மட்டும் காண்பிக்காது. அந்த வார்த்தையை பயன்படுத்தி சமீபத்தில் வெளியான டிவிட்டுகளையும் கூகுள் காண்பிக்கும்.

உடனே செக் செய்து பார்க்க வேண்டுமா. சென்னையின் பிறந்த நாளை கொண்டாட டிவிட்டர் பயனாளிகள் உருவாக்கிய HBDChennai என்ற சொல்லை கூகுளில் போட்டு பாருங்கள். உங்களுக்கே தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+