சென்ட்ரல் குண்டுவெடிப்பு: ஓராண்டாகியும் ஒருவரும் கைதில்லை... கண்ணீரில் ஸ்வாதி குடும்பம்!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்து இன்றோடு ஓராண்டாகி விட்டது. ஆனாலும் இந்த வழக்கில் துப்புத் துலங்கவில்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.
கடந்த ஆண்டு மே 1ஆம் தேதி காலை பெங்களூரில் இருந்து குவாஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்தது. காலை 7.15 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் ரயிலின் எஸ்-4 மற்றும் எஸ்-5 பெட்டிகளில் ஒன்றன்பின் ஒன்றாக 2 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திரமாநிலம் குண்டூரைச் சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர்.

இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தேசியப் புலனாய்வு அமைப்பு (NIA) விசாரணைக்கு உத்தரவிடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த தமிழக அரசு, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழக போலீஸார், பெங்களூரு சென்று விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், விரைவில் விசாரணை முடிவுக்குவரும் என்றும் தெரிவித்தனர். ஆனால், சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இளம் பெண் ஸ்வாதியை இழந்த துயரில் இருந்து மீளவில்லை அவரது குடும்பம். ஸ்வாதியின் தந்தை பரிசூரி ராமகிருஷ்ணன், தாய் காமாட்சி தேவி ஆகியோர் இன்னமும் மகளை இழந்த சோகத்தில் இருந்து மாறவில்லை.

பள்ளியில் சுவாதிதான் முதல் மாணவியாம். எம்.டெக்கில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, வேலைக்குச் சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்க வேண்டிய தலைமை பொறியாளர் பதவி, உடனே கிடைத்தது என்கிறார் சுவாதியின் தாயார். என் மகள் வாழ்க்கையில் எல்லாமே சீக்கிரமாக நடந்துவிட்டது. மரணமும் கூட'' என்று கண்ணீர் விடுகிறார் தாயார் காமாட்சி தேவி.

ஸ்வாதி இறந்த பிறகு தமிழகத்தில் இருந்து பேசிய ஒரு போலீஸ் அதிகாரி, ‘உங்கள் பெண் தெய்வத்தின் குழந்தை. வெடிகுண்டு வெடிக்கத் தொடங்கியவுடனேயே உங்கள் மகள் அந்த வெடிகுண்டுவின் மீது குப்புற விழுந்துவிட்டாள். குண்டு மொத்தமும் அவரது நெஞ்சுக்குள் புதைந்து வெடித்திருக்கிறது. இல்லையெனில் அந்தப் பெட்டியில் இன்னும் நிறைய பேர் இறந்திருப்பார்கள்' என்றார். ஆமாம், ஸ்வாதி தெய்வத்தின் குழந்தைதான்!'' என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications