“டுவிட்டர்” பக்கத்தை இனி தமிழிலேயே உபயோகிக்கலாம்- மொழிமாற்றத் தேர்வில் 4 புதிய மொழிகள் இணைப்பு
சென்னை: பேஸ்புக்கிற்கு அடுத்ததாக மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமான டுவிட்டர் தன்னுடைய வலைப் பகுதியில் தமிழில் டுவிட் செய்யும் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் தமிழ் டுவிட்டர் வாசிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
பிரபல சமூக வலைத்தளமான "டுவிட்டர்" மூலம் தங்களது நிலைப்பாட்டை பதிவு செய்யாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், டுவிட்டரின் தலைப்பு பக்கம், செயல்பாடு தொடர்பான விருப்பத் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.

இருப்பினும், நமது தமிழ் டுவிட்டிகள் "யூனிகோட்" எழுத்துருவின் வாயிலாக டுவிட்டரோடு இணைந்திருந்து தங்களது நிலைப்பாட்டினையும், உலகில் நடைபெறும் முக்கிய சம்பவங்கள் தொடர்பான கருத்துகளையும் அவ்வப்போது பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
டுவிட்டரில் ஆங்கிலம் தவிர, இதர இந்திய மொழிகளின் மைய எழுத்துரு வடிவங்களாக இதுவரை இந்தி மற்றும் வங்காளம் ஆகிய இரு மொழிகளே இருந்து வந்தன. இந்நிலையில், தமிழ், கன்னடம், குஜராத்தி, மராத்தி ஆகிய நான்கு மொழிகளில் பயன்பாட்டாளர்களுக்கு உதவும் தலைப்பு பக்கத்தை டுவிட்டர் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
தலையாய முக்கிய நிகழ்வுகள், யாரை பின் தொடரலாம்? உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இனி தமிழ் உள்பட மேற்கண்ட நான்கு மொழிகளில் கண்டு, உபயோகித்து, பயன் பெறலாம். தற்போது, டுவிட்டரை ஆங்கில மொழி வாயிலாக பயன்படுத்தி வருபவர்கள், இனி, தங்களது மூலப் பக்கத்தில் உள்ள மெனுவை "கிளிக்" செய்து, மொழிமாற்றத் தேர்வை மாற்றி, தமிழிலேயே அனைவரோடும் டுவிட்டலாம்.
தமிழுடன் சேர்த்து மொத்தம் ஆறு இந்திய மொழிகளில் "டுவிட்" வசதியை டுவிட்டர் ஏற்படுத்தி தந்துள்ளது. இதற்கான ஆன்ட்ராய்ட் ஆப் சப்போர்ட்டும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications