இனி பாரதியார் கவிதை படிக்கறத பாத்தா பொண்டாட்டி கிட்ட இருந்து செருப்படி விழும் போல! #Lakshmishortfilm

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லட்சுமி என்ற குறும்படத்தில் பாரதியார் பாடல் பயன்படுத்தப்பட்டதற்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண் லட்சுமி, வீட்டு வேலைகளை பார்ப்பது, குழந்தையை கவனித்துக் கொள்வது என்று இருந்து வருகிறார். திடீரென அவர் ஒரு ஆணுடன் நெருங்கி பழகுகிறார்.

அந்த ஆண் லட்சுமியை தன் வசப்படுத்தவும் அவர் பாரதியாரின் புதுமை பெண்ணாக இருக்க வேண்டும் என்றபதற்காகவும் அவரின் கவிதைகளை கூறுகிறார். பெண்கள் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற கோட்பாடுகளை கொண்ட சமூகத்துக்கு சற்றும் பொருந்தாத விஷயத்துக்கு பாரதியாரின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பும் லட்சுமிக்கு ஆதரவான நிலைப்பாடும் நிலவி வருகிறது.

குஷிதானே


பிக்பாஸ்-க்கு பிறகு குறும்படம் என்றாலே குஷியாகி விடுகிறார்கள் போலும்... குறும்படத்திற்கு மவுசு அதிகரித்து விட்டது...
#லட்சுமி #Lakshmishortfilm

திருட்டு தப்புதான்

ருசிக்கு திருடினவன் புருஷன்.
பசிக்கு திருடினவ லக்ஷ்மி.

திருட்டு தப்புதான். ஆனா இரண்டும் ஒன்னில்லை.

#Lakshmishortfilm

அவ புருஷன சொல்லுங்க

லக்ஷ்மி செஞ்சது தப்புன்னு சொல்றவனை விட, லக்ஷ்மி செஞ்சதும், அவ புருஷன் செஞ்சதும் ஒன்னுதான்னு சொல்றவன்தான் நெம்ப டேஞ்சர்.

கன்ராவி

இதுக்குதான் இந்த கல்யாணம் எல்லாம் செட்டே ஆகாதுன்னு சொன்னா எவன் கேட்கறான். கமிட்மெண்ட், கன்ராவின்னு கதை அளப்பானுக.

#Lakshmishortfilm

தூண்டாதீர்கள்

ஆண்கள் செய்யும் தவறை தவர் என்று சுட்டிக்காட்டுங்கள் .. ஆனால் அதே தவறை பெண்கள் செய்ய தூண்டாதீர்கள் ..

பொண்டாட்டி பார்த்தா அவ்வளவுதான்

இனிமே பாரதியார் கவிதை படிக்கறத பாத்தா பொண்டாட்டி கிட்ட இருந்து செருப்படி விழும் போல

கலாசார சீரழிவு

#Lakshmishortfilm குறும்படம்னு சொல்லிட்டு பலான படமாக்கி.. பாரதியார் பாட்டை வேற கொச்சை ஆகிட்டாங்க..கலாச்சார சீரழிவு

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netisans go on debate in social medias about Bharathiyar's poem quoted in a short film Lakshmi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற