புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது, மனம் சூடான இடம் தேடுகிறது: ட்வீட்டும் அமெரிக்காவாசிகள்
சென்னை: அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதியை தாக்கிய கடும் பனிப்புயல் பற்றி பலரும் புகைப்படத்துடன் ட்வீட் செய்து வருகிறார்கள்.
அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதியில் கடந்த 4 நாட்களாக கடும் பனிப்புயல் வீசியது. பனிப்புயலால் 20 மாநிலங்கள் பாதிக்கப்பட்டன. 12 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. நியூயார்க் நகரை பனிப்புயல் முடக்கிப் போட்டது. பனிப்புயலால் ஏற்பட்ட கார் விபத்துகள், குளிரை தாங்க முடியாமல் உடல் நலம் பாதிப்பு, மாரடைப்பால் 30 பேர் பலியாகியுள்ளனர்.
ஜோனாஸ் என்று பெயரிடப்பட்ட பனிப்புயலால் 12 ஆயிரம் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பனிப்புயல் வீசிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
|
புகைப்படம்
பனியிலும் மகள்களுடன் புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் எர்னெஸ்டோ.
|
நியூஜெர்சி
நியூஜெர்சியில் எப்படி பனிப்புயல் வீசுகிறது பாருங்கள் என்று அதை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சேத்தன்.
|
பனி
பனிப்புயலால் சாலைகள், வாகனங்கள் பனியால் மூடப்பட்டு காட்சியளிக்கும் புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
|
டெலாவேர்
டெலாவேரில் கொட்டிக் கிடக்கும் பனியில் கூலாக ஒருவர் படுத்திருக்கும் புகைப்படத்தை ஸ்டீவ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
|
காலையில்
எப்.எம். என்பவர் இன்று காலை எழுந்து பனியை புகைப்படம் எடுத்து ட்வீட் செய்துள்ளார்.
|
சென்ட்ரல் பார்க்
பனிப்புயலால் மான்ஹாட்டனில் உள்ள சென்ட்ரல் பார்க் வெள்ளை வெளேர் என்று அழகாக காட்சியளிக்கிறது.
|
நியூயார்க்
நியூயார்க் நகர் தான் பனிப்புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீஸ் வாகனங்கள் பனியால் முற்றிலும் மூடப்பட்டிருக்கும் புகைப்படத்தை ஒருவர் வெளியிட்டுள்ளார்.
|
விளையாட்டு
சென்ட்ரல் பார்க்கில் மக்கள் பனியில் விளையாடும் வீடியோவை பியோன் லீ வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications